latest news
நமது ஆத்மா சந்தோசம் அடைய என்ன செய்ய வேண்டும்?
மனிதர்களை புது புது நோய்கள் தாக்கி வரும் இந்த சூழலில் எத்தனையோ மருத்துவ வளர்ச்சி இருந்தாலும் தெய்வ வழிபாடில் மக்களின் நம்பிக்கை ஒருபோதும் குறைவதில்லை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. மன நிம்மதியை இழந்தவர்களுக்கு கடவுள்தான் வழி காட்டுவார் என்று பலரும் சொல்வது வழக்கம்.
அந்தவகையில் நோயில் இருந்து பூரணமாக நீங்கவும், புதுப்பொலிவுடன் வாழ்வை கொண்டு செல்லவும் இறைவன் வழிபாடு மிக முக்கியமானது. இறைவழிபாடு தினமும் செய்து வந்தால் மட்டும் தான் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும், நம் மீது நமக்கு நம்பிக்கை வரும். எனவே நாம் இருக்கும் இடம் ஏதுவாக இருந்தாலும் கடவுளை மனதில் நினைப்போம், பகல் முழுவதும் மனதில் வேண்டாத எண்ணங்கள் வந்து போகும்.
மாலை வந்ததும், பகவானிடம் மனதை கொண்டு சென்றால் மனம், மற்ற விஷயங்களை மறந்து, சில நிமிட நேரமாவது பகவானிடம் தஞ்சம் புகுந்து இருக்கும். மனதுக்கும் அமைதி கிடைக்கும். பிறருக்காக வேலை செய்கிறோம் ,பணம் சம்பாதிக்கிறோம்,சொந்தங்களை கவனிக்கிறோம். இவை அனைத்தும் நமக்கு இருக்கும் ஒரு கடமை. அதே போல தன் நன்மைக்கும், ஆத்மா சந்தோசம் அடைவதற்கும் சுலபமான வழி பகவானை வழிபடுவதுதான் மனித வாழ்க்கை என்பது மிகவும் சிறிய கால அளவு கொண்டது.
இந்த சிறிய காலத்துக்குள் நாம் ஒவ்வொரு பயனுள்ள வகையில் செலவிடுவதே நம்மை நல்ல வழில் கொண்டு செல்லும். இந்த பிறவியில் நாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வை பொறுத்தது ஆனால் எல்லாவற்றிலும் நம் ஆத்மா மகிழ்ச்சி அடையாது. நமது ஆத்மா சந்தோசம் அடைய, இந்த பிறவியில் நமக்கு உயிரையும், உடம்பையும் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல தவற கூடாது. இதற்குத்தான் நம் முன்னோர்கள் கோவில்களை கட்டினார்கள். கோவில்களுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீடுகளில் இருந்து இறைவனை தரிசனம் செய்வோம்.
