Connect with us

பங்குனிஉத்திரம் – குலதெய்வ வழிபாட்டின் சிறப்பு

Panguniutram - specialty of clan deity worship

latest news

பங்குனிஉத்திரம் – குலதெய்வ வழிபாட்டின் சிறப்பு

பங்குனி உத்திரம்பங்குனி மாதத்தில் பவுர்ணமி திதியும் உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வருவது பங்குனி உத்திரத்தின் சிறப்பு.
முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணமும் இந்நாளில்தான் நடந்தது என்பது ஐதீகம்.

பங்குனிஉத்திரம் – குலதெய்வ வழிபாட்டின் சிறப்பு.
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். இந்நாளில் குலதெய்வம் திருக்கோவிலை வழிபடும் நாளாக பங்குனி உத்திர திருநாள் அன்று ஒன்று கூடி பொங்கல் வைத்தும், படையல் இட்டும், தேங்காய் உடைத்தும், மொட்டை அடித்தும், காத்து குத்தியும், பால்குடம் எடுத்தும் தங்கள் குலதெய்வங்களை பங்குனி உத்திர விழாவினை சிறப்பாக வழிபடுகிறார்கள்.

பங்குனி உத்திரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திரம் அன்று பெருமாளின் மனதையே ஆண்டதால் கோதை அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்கப்பட்டாள். இன் நிகழ்வை மையமாகக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனி உத்திர திருவிழா வருடந்தோறும் கொண்டாப்படுகிறது.

More in latest news

To Top