Connect with us

நாக தோஷம் என்றால் என்ன?

Naga Dosha What should you do

latest news

நாக தோஷம் என்றால் என்ன?

ஆடி மாதத்தில் வரும் திதிகள், நட்சத்திரங்கள் மற்றும் கிழமைகள் நமக்கு நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. இந்த மாதத்தில் கொண்டாடப்படும் நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி போன்ற விழாக்கள் இதற்கு சான்றாகும்.

இந்து மதத்தில் நாகங்கள் தெய்வமாக வழிபடப்படுகின்றன. அவற்றை துன்புறுத்துவது பெரும் பாவம். நாம் அறியாமல் நாகங்களை காயப்படுத்தியிருந்தால், அதன் விளைவாக ஜாதகத்தில் நாக தோஷம் ஏற்படலாம்.

இதையும் படிக்கலாமே:

தொழிலில் வெற்றியடைய எலுமிச்சை பரிகாரம் https://astrologytamil.in/is-lemon-a-remedy-for-success-in-business/

இந்த தோஷத்தை போக்க, அரச மரம் அல்லது வேப்ப மரம் உள்ள இடத்தில் நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். மற்றவர்கள் அரச மரத்தடியில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால், தண்ணீர் ஊற்றி, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்து வழிபடலாம்.

நாகர் சிலைக்கு பூ மாலை, பட்டு வஸ்திரம், சர்க்கரை பொங்கல், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவற்றை படைத்து, கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால், அனைத்து தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

More in latest news

To Top