INFORMATION
பண கஷ்டத்தை போக்கும் பௌர்ணமி வழிபாடு
பௌர்ணமி பரிகாரங்கள்:
இன்று ஆவணி மாதம் முழு பௌர்ணமி நிலவு, சந்திர பகவான் பிரகாசமாக உதயமாகும் நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கையை வந்து சேரும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு பிரியாணி இலை, ஒரு நீல நிற பேனா ஸ்கெட்ச் ஏதாவது ஒன்று தேவை. இந்த பரிகாரத்தை வெட்டவெளியில் அமர்ந்து மாலை 6:30 மணிக்கு மேல் செய்வது சிறப்பு. ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ‘5266797’ என்ற இந்த நம்பரை முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை இருக்கிறது அதையும் எழுதுங்கள். உதாரணத்திற்கு ‘50,000 பணம் தேவை’ இப்படி எழுதி இந்த பிரியாணி இலையை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு சந்திரனைப் பார்த்தவாறு உங்களுடைய பிரார்த்தனையை வைக்கவும். கூடிய சீக்கிரம் இந்த பணம் என் கைக்கு வரும். என்னுடைய தேவைகள் பூர்த்தியாகும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அகல் விளக்கு ஏற்றி அந்த பிரார்த்தனை நிறைவேறியதாக மானசீகமாக நினைத்துக் கொண்டு அந்த பிரியாணிஇலையே அந்த நெருப்பில் பொசிக்கி விடுங்கள். பொசுக்கிய இந்த சாம்பலை தண்ணீரில் கலந்து கீழே ஊற்றி விடலாம்.
இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி போக்கும் வெண்கடுகு பரிகாரம் https://astrologytamil.in/mustard-remedy-for-eye-strain/
பௌர்ணமி நாளில் மாலை வேளையில் லட்சுமி தேவியின் படத்திற்கு முன் விளக்கேற்றி, மஞ்சள் நிற மலர்கள் அர்ப்பணித்து வழிபடுவது நல்லது. ஒரு வெள்ளி அல்லது தாமிரக் கலத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கமலப்பூவை வைத்து வழிபடுவது பணவரத்தை அதிகரிக்கும். பௌர்ணமி நாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியம். லட்சுமி மந்திரங்கள், கணபதி மந்திரங்கள் போன்றவற்றை தினமும் ஜெபிப்பது நல்லது.
பொன்னிறப் பொருட்களை வைத்தல்: பௌர்ணமி நாளில் வீட்டில் பொன்னிறப் பொருட்களை வைப்பது வாஸ்து தோஷங்களை நீக்கி, பணவரத்தை அதிகரிக்கும். எப்போதும் நேர்மறையாக சிந்தித்து, நம்பிக்கையுடன் இருப்பது பணவரத்தை ஈர்க்கும்.
