Connect with us

கண் திருஷ்டி போக்கும் வெண்கடுகு பரிகாரம்

Mustard remedy for eye strain

INFORMATION

கண் திருஷ்டி போக்கும் வெண்கடுகு பரிகாரம்

கண் திருஷ்டி என்பது ஒரு நம்பிக்கை சார்ந்த பிரச்சனை.ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எந்த ஒரு நல்ல செயல் நடந்தாலும் தீய செயல் நடந்தாலும் அதனால் கண் திருஷ்டி என்பது ஏற்படும்.இந்த கண் திருஷ்டி மிகவும் மோசமான ஒன்று என்பதால் தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அமர வைத்து சுற்றி போடும் வழக்கம் வைத்திருந்தார்கள். இன்றைய காலத்தில் அவை அனைத்தையும் நாம் மறந்து விட்டோம். இதற்கு பலவிதமான பரிகாரங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வெண்கடுகு பரிகாரம்.
தொழில் செய்யும் இடத்தில் கண் திருஷ்டி ஏற்பட்டு திடீரென்று தொழில் சரிவடைந்து விட்டது என்பவர்களும், தொழிலில் பிரச்சனைக்கு மேல் பிரச்சினைகள், ஒன்றும் இல்லாத பிரச்சனைகள் ஆக வருகிறது என்பவர்களும், அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் இரண்டு சிறிய தட்டை வைத்து அதில் சிறிதளவு வெண்கடுகை போட்டு அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து கடுகு எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் தொழில் செய்யும் இடத்திற்கு வரும் அனைவரும் பார்க்கும்படி இருக்க வேண்டும். காலையில் மாலையிலும் தினமும் ஏற்றலாம். இயலாதவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது ஏற்றுவதன் மூலம் அவர்களின் தொழிலில் இருக்கக்கூடிய கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.

பரிகார முறை:
ஒரு கைப்பிடி வெண்கடுகை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதை உங்கள் தலைக்குச் சுற்றி விட்டு, பின்னர் உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்ததும், பல் தேய்த்து முகம் கழுவி விட்டு, அந்த வெண்கடுகை ஒரு தாம்பாளத்தில் சேர்த்து, அதில் ஒரு கற்பூரம் போட்டு எரிக்க வேண்டும்.

Continue Reading
You may also like...

More in INFORMATION

To Top