Connect with us

இன்றைய தினத்தை மிஸ் பணிடாதீங்க! துன்பத்தை விரட்டியடிக்கும் முருக வழிபாடு

Tiruchendur Murugan Temple Ganda Shashti Festival

INFORMATION

இன்றைய தினத்தை மிஸ் பணிடாதீங்க! துன்பத்தை விரட்டியடிக்கும் முருக வழிபாடு

சித்திரை மாத கிருத்திகை முருக வழிபாடு துன்பத்தை விரட்டியடிக்கும், நாளைய தினம், 29 ஏப்ரல் 2025, செவ்வாய்க்கிழமை. இந்த நாளின் விசேஷம் என்னவென்றால், இது சித்திரை மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம். இந்த இரண்டு நிகழ்வுகள் ஒரே நாளில் சந்திப்பது என்பது மிகவும் அரிதான, ஆன்மிக ரீதியாகச் சக்திவாய்ந்த சந்திப்பு.

முருக வழிபாடு துன்பத்தை விரட்டியடிக்கும், இந்த நாளில் முருகனை மனமுருகி வழிபட்டால், மனித வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலகும் என நம்பப்படுகிறது. நரகமென தோன்றும் வாழ்க்கை கூட சொர்க்கமாக மாறும் என புராணங்கள் கூறுகின்றன. கிருத்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதத்திலும் வருகிறது, ஆனால் சித்திரை மாத கிருத்திகை மட்டுமே சிறப்பு வாய்ந்தது. இதுவே முருகனது திருஉருவம் தோன்றிய நாளாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த நாளில் முருகனை வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும், குடும்ப பிரச்சனைகள் தீரும். மேலும் இந்த ஆண்டு இந்த கிருத்திகை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்துள்ளதால், இது கடன், நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாக இருக்கும். எனவே இந்த நாளில் முருகனை வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
திருமலை 2025 ஆம் ஆண்டு மே மாத முக்கிய உற்சவங்கள் 
https://astrologytamil.in/important-festivals-in-may-2025-in-tirumala/

வழிபாட்டுக்குப் பிறகு நெய்வேதியம் வைத்து, தீபம், தூபம், கற்பூரம் காட்டி வழிபாட்டை முடிக்கவும், துவரம் பருப்பை காகங்கள், பறவைகளுக்கு இரையாக போடவும், செம்பருத்தி இலை வாடியதும் கால் படாத இடத்தில் போடலாம், இந்த செம்பருத்தி இலை வேல் போன்ற வடிவத்தை கொண்டது. முருகனுக்கு இது மிகவும் உகந்தது. இலை மூலம் சமர்ப்பிக்கப்படும் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்த பரிகாரம் வெற்றிலை வழிபாட்டுக்கு நிகராக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை கிருத்திகை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால், உங்கள் வாழ்வில் நிலம், வீடு, கடன் பிரச்சனைகளுக்குத் தீர்வு தேட, இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.

More in INFORMATION

To Top