சொந்த வீடு கட்ட செவ்வாய் பகவானின் அருள் பரிபூரணமாக இருந்தால் மட்டுமே சொந்தமாக இடம் வாங்க முடியும், வீடு கட்ட முடியும் என்று நினைப்பவர்களுக்கு வாராஹி அம்மனை வழிபட்டால் நடக்கும் அற்புதங்களை இந்த ஆன்மீக பதிவில் நாம் பார்போம். .
வாராஹி அம்மனை முழு மனதோடு நம்பி வழிபட நம்மை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் தெய்வமாக திகழ்வாள்.
வீட்டிலுள்ள வாராஹி அம்மனின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு மேல் செய்ய வேண்டும். வாராஹி அம்மனின் படம் இல்லாத பட்சத்தில் வீட்டில் உள்ள விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி அதில் வாராஹி அம்மனை மனதில் நிறுத்தி வேண்டி கொள்ளலாம்.
பூஜை செய்யும் நபர் நெற்றியில் அரகஜாவை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாராஹி அம்மனுக்கு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகளில் ஏதாவது ஒன்றையோ, அல்லது தேனூற்றிய மாதுளம் பழ முத்துகளையோ அல்லது பானகம் வைத்துகூட வழிபடலாம்.
சிவப்பு நிற மலர்களைக் கொண்டு வாராஹி அம்மனுக்கு அலங்காரம், செய்யது பிறகு வாராஹி அம்மனுக்குரிய மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.
பிறகு நெய்வேத்தியபிரசாதத்தை வழங்கலாம். கோவிளுக்கு செல்பவராக இருந்தால் வாராஹி அம்மனுக்கு தீபம் ஏற்றி நெய்வேத்தியம் வைத்து அம்மனுக்குரிய மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்க வேண்டும்.
ஓம் குண்டலினி புரவாசினி,
சண்ட முண்ட விநாசினி,
பண்டிதஸ்ய மனோன்மணி,
வாராஹீ நமோஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி,
அஷ்டதாரித்ரய நாசினி,
இஷ்ட காமப்ரதாயினி,
வாராஹீ நமோஸ்துதே!
பிறகு அந்த நெய்வேத்தியத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் செய்துவர வேண்டும். வாராஹி அம்மனை முழு மனதோடு நம்பி வழிபட அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி விரைவிலேயே அம்மனின் அருளால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…