INFORMATION
சிங்க வாகனத்தில் யோக நரசிம்ம அலங்காரத்தில் பத்மாவதி அம்மன்
திருச்சானூர் பத்மாவதி அம்மன் கார்த்திகை பிரம்மோற்சவங்களின் மூன்றாம் நாளான இன்று (சனிக்கிழமை) இரவு, சிங்க வாகனத்தில் யோக நரசிம்ம அலங்காரத்தில் பத்மாவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
துாபான் காரணமாக வாகன மண்டபத்தில் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்கலாமே: அய்யப்ப பக்தர்கள் கூடுதல் நேரம் தரிசனம் https://astrologytamil.in/ayyappa-devotees-have-extra-time-for-darshan/
சிங்கம் வீரத்திற்கும், வேகத்திற்கும் உரியது. சிங்க வாகனத்தில் அம்மன் எழுந்தருளும் போது, துஷ்டர்களை அழித்து, சாதுக்களை காப்பாற்றுவார். பத்மாவதி அம்மன் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், வீரம், யசஸ், ஸ்ரீ (புகழ்), ஞானம், வைராக்கியம் ஆகிய ஆறு குணங்களையும் வழங்குவார்.
இந்நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமை செயல் அலுவலர் ஜெ. ஷ்யாமலா ராவ், கூடுதல் செயல் அலுவலர் வெங்கயா சவுத்ரி, இணை செயல் அலுவலர் வீரபிரம்மம், மாவட்ட எஸ்பி எல். சுப்பராயுடு, கோயில் துணை செயல் அலுவலர் கோவிந்தராஜன், கோயில் அர்ச்சகர் பாபு சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
