Connect with us

வேண்டுதல் நிறைவேற பெருமாளை வணங்குங்கள்

Worship Perumal to get your wish fulfilled

INFORMATION

வேண்டுதல் நிறைவேற பெருமாளை வணங்குங்கள்

பெருமாள் என்பவர் அன்பு, கருணை, பாதுகாப்பு ஆகியவற்றின் உருவமாக இந்து மதத்தில் போற்றப்படுகிறார். அவர் மீது பக்தியுடன் வேண்டிக்கொண்டால், எல்லாவிதமான வேண்டுதல்களும் நிறைவேறுவதாக ஐதீகம். பெருமாளை வழிபடுவதன் மூலம் நாம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
இந்த பூலோகத்தில் நாம் எந்த அளவிற்கு நன்றாக வாழ்கிறோமோ, வாழ வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அளவிற்கு பெருமாளை நாம் வழிபாடு செய்ய வேண்டும். பெருமாள்தான் காக்கும் தெய்வமாக திகழ்கிறார்.நாம் நலமோடு வாழ்வதற்கு தேவையான பொன்னையும், பொருளையும் தரக்கூடிய தெய்வமாக திகழ்பவர் பெருமாள்.பெருமாளுக்கு வாசனை மிகுந்த மலர்கள், தாமரைப்பூ, துளசி போன்றவற்றை வாங்கி தர வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் அவருக்கு நாம் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபமானது மாவிளக்கு தீபமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். ஒன்பதாவது வாரம் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபாட்டை பூர்த்தி செய்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:

புது வீட்டில் பால் காய்ச்சும் போது எந்த திசையில் வழிந்தால் என்ன பலன்

https://astrologytamil.in/when-boiling-milk-in-a-new-house-what-is-the-benefit-if-it-flows-in-any-direction/

பெருமாள் வழிபாட்டின் முக்கியத்துவம்:
பெருமாள் மீது கொண்ட பக்தி, நம் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி வாய்ந்தது. பெருமாளை நினைத்து பக்தி செய்வதால் மனதில் அமைதி ஏற்படும். அச்சங்கள், பயங்கள் நீங்கி நம்பிக்கை அதிகரிக்கும். பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும். வாழ்க்கையில் செல்வம், செழிப்பு, நன்மைகள் அதிகரிக்கும்.

பெருமாள் வழிபாட்டு முறைகள்:
பெருமாளின் திருநாமங்களை ஜபிப்பது மிகவும் பலனளிக்கும். பெருமாளின் ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது.

  • Worship Perumal to get your wish fulfilled
  • Worship Perumal to get your wish fulfilled
Continue Reading
You may also like...

More in INFORMATION

To Top