Connect with us

மாபெரும் போரில் விளைந்த விவேகானந்தர் பாறை வரலாறு

vivekananda rock memorial

latest news

மாபெரும் போரில் விளைந்த விவேகானந்தர் பாறை வரலாறு

இந்தியாவின் வளர்ச்சிக்கும்,இளைங்கர்களை நல்ல வழியில் கொண்டு செல்லவும் பல அற்புதங்கள் செய்தவர் விவேகானந்தர்.இன்று நம்முடன் அவர் இல்லை என்றாலும் அவர் சென்ற பாதைகளை பின் தொடர்ந்து பலரும் நல்ல வழியில் பல நன்மைகளை செய்து வருகின்றனர்.சுவாமி விவேகானந்தர் நம் நாட்டில் வாழ்ந்ததற்கான அடையாள சின்னமாய் விளங்குவது தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் காணப்படும் அவரது நினைவு மண்டபம் தான் இன்று கன்னியாகுமரிக்கு யார் சென்றாலும் தவறாமல் விவேகானந்தர் பாறைக்கு செல்லாமல் வீடு திரும்ப மாட்டார்கள்.

இன்றும் அற்புதமாய் திகழும் இந்த விவேகானந்தர் பாறை எப்படி உருவானது என்று தெரியுமா. 1892ஆம் வருடம் டிசம்பர் மாதம் விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்தார் பின் கடற்கரையில் இருந்து சிறிது தூரம் கடலுக்கு உள்ளே அமைந்து இருக்கும் பாறை ஒன்றை கண்டார் அப்பாறைக்கு தனி ஒரு மனிதனாய் நீந்திச் சென்று மூன்று நாட்கள் தியானம் செய்துள்ளார்.

அந்த இடம் தான் பிற்காலத்தில் விவேகானந்தர் பாறை என்று அழைக்கப்படுகிறது.பின் விவேகானந்தரின் நூறாவது ஆண்டான 1963-ம் வருடம் இந்திய அரசு அவருக்காக ஒரு நினைவுச் சின்னத்தை வடிவமைக்க முடிவு செய்து விவேகானந்தர் பாறையில் அவரின் நினைவு மண்டபம் கட்ட உறுதி செய்யப்பட்டது. நினைவு மண்டபத்திற்கு செல்ல கரையிலிருந்து செல்ல பாலம் ஒன்றை கட்டவும் சேர்த்து முடிவு செட்டப்பட்டது .1962-ம் வருடம் கட்டதொடங்கப்பட்ட இம்மண்டபம் 1970-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

தற்போது இந்தியாவின் சுற்றுலாத்தலங்களில்மிக அற்புதமாக விளங்குகிறது இந்த நினைவு மண்டபத்தை.கட்ட ஆரம்பித்ததில் இருந்து கட்டி முடிப்பதற்குள் பல பிரச்னைகள் ஒரு வரலாறாகவே மாறிவிட்டது. நினைவு மண்டபம் கட்டும் பணிகளை வேலாயுதம் பிள்ளை என்பவரின் தலைமையில் மிக விரைந்து நடந்து கொண்டிருந்தது. நம் நாட்டில் எந்தவொரு நல்ல செயலும் தடையில்லாமல் நடந்து முடிந்ததேயில்லை.விவேகானந்தர் பாறையில் காலை வேளையில் கரையிலிருந்து பார்த்தால் தெரியுமளவிற்கு பெரிய சிலுவை ஒன்று காணப்பட்டது அந்தப் பாறை அங்குள்ள கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்வாதாரமாய் இருந்துள்ளது.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது சிறிது நேரம் அந்த பாறையில் ஓய்வு எடுக்கவும்,மீன் வலைகளை காய வைக்கவும்,கடலில் இருந்து கொண்டுவந்த பொருட்களைப் பரிமாற்றம் செய்வதற்கும் என பல காரணங்களுக்கு அப்பாறையை பயன்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் விவேகானந்தர்க்கு நினைவு மண்டபம் அமைந்தால் அவர்களுக்கும்,அந்த பாறைக்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படும் என்று நினைத்து புனித சேவியர் அங்கு ஜெபம் செய்தார் என்று சொல்லி அந்த சிலுவையை ஒரே இரவில் நிறுவினர்.இதனால் பல எதிர்ப்புகள் வந்தவண்ணம் இருந்தது.

சிலுவைக்கான காரணத்தை மீனவர்களிடம் விசாரிக்கையில்.அந்தப் பாறையில் பல வருடங்களுக்கு முன் ஒரு பெரிய சிலுவை இருந்தது அது காலப்போக்கில் அழிந்துவிட்டதாகவும், இப்போது மீண்டும் சிலுவையை நிறுவியுள்ளதாகவும் கூறி வந்தனர்.விசாரணையின் முடிவில் கிறிஸ்தவர்களுக்கும் அந்தப் பாறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது மேலும் அந்த சிலுவை அகற்றப்பட்டது.

இனிமேலும் நினைவு மண்டபத்தை எழுப்பும் செயல் மாநிலத்தின் அமைதியை கெடுக்கும் என்று எண்ணி அன்றைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம், அப்பாறை விவேகானந்தர் மூன்று நாட்கள் தியானம் செய்த இடம் என்பதற்கான அடையாளமாய் ’இந்தப் பாறை சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த இடம்’ என்னும் எழுத்துகளை மட்டும் பலகை ஒன்றில் எழுதி 1963ஆம் வருடம் ஜனவரி மாதம் நிறுவப்பட்டது.

இந்த கலவரங்கள் அனைத்தும் சிறிது ஓய்ந்திருந்த நிலையில், இந்த பிரச்சனை இந்துக்களால் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரிடம் கொண்டுசெல்லப்பட்டு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு தடையாய் இருப்பவர்கள் இரண்டு முக்கிய பிரமுகர்கள் என்பது தெரிவந்தது .மாநிலத்தின் அமைதி கெட்டுவிடும் என்று நினைத்த தமிழக முதலமைச்சர் பக்தவத்சலமும், பாறையின் அழகு கெட்டுவிடும் என்று நினைத்த அன்றைய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஹுமாயூன் கபீரும் ஆவர். இவர்களின் எதிர்ப்புகளை ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஏக்நாத் ரனடே முறியடித்தார் பின்பு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு, 1970-ம் வருடம் விவேகானந்தர் பாறையில் அவருக்கான நினைவு மண்டபம் அற்புதமாக கட்டி முடிக்கப்பட்டது.

Continue Reading
You may also like...

More in latest news

To Top