INFORMATION
ஆடி பூரம் அம்மனுக்கு வளைகாப்பா
ஆடி பூரம் அம்மனுக்கு வளைகாப்பு
ஆடிப் பூரம் என்பது ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் நாளன்று தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றாகும்.
இந்நாளில் அம்மன் வழிபாட்டிற்கு சிறந்த நாளாகும். அன்று அம்மனுக்கு வளைகாப்பு செய்து அம்மனுக்கு மடி நிறைத்து வழிபடுவர்.
அந்நாளில் புதுமண தம்பதியர் வழிபட குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பெண்களின் அம்மாவாக போற்றப்படும் அம்பாள்
பெண்களின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் வாழ்க்கை இனிமையாக அமையவும் அம்மனை தனது அம்மாவை போல் போற்றி இந்த வழிபாடு செய்யப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:
பழநியில் வரவேற்கும் மரங்கள்
https://astrologytamil.in/palani-hill-trees-shining-with-colorful-paintings/
அம்மனுக்கு வளையல் அணிவிப்பதன் மூலம் அனைத்து பெண்களின் வாழ்க்கையும் இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் அமைய வேண்டும் என்ற வேண்டுதலை செலுத்துகின்றனர்.
அம்மனுக்கு வளைகாப்பு செய்யும் பழக்கம் பல ஆண்டுகளாக தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி பூரம் நாளில் அம்மனுக்கு வளையல் காப்பு செலுத்துவது நல்ல பலனை தரும் மேலும் அம்மன் தன் பிள்ளைக்கு செய்வதுபோல் நன்மை புரிவாள்…
