இன்றைய (24 மே 2025) ராசிபலன்

இன்றைய (24 மே 2025) ராசிபலன்

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Mesham)
ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுப் பெறக்கூடிய நாள். பணியிடம் மற்றும் சமூகத்தில் உங்கள் முயற்சிகள் கவனிக்கப்படும். இது உங்களது மனதுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரும். குடும்பத்திலும் நல்ல ஒத்துழைப்பு காணப்படும். பழைய முயற்சிகள் இன்று பலனளிக்கக்கூடும்.

ரிஷபம் (Risabam)
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். திடீரென நிலைமை மாறக்கூடும். தொழிலில் கடினமான வேலைகள் ஏற்படும், அதனால் மனதளவில் சோர்வும், பதட்டமும் உண்டாகலாம். நிதி செலவுகள் அதிகரிக்கலாம் என்பதால் திட்டமிட்ட செலவுகள் அவசியம்.சில வருமான வாய்ப்புகள் வரும்.

மிதுனம் (Mithunam)
ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாள். மனதளவில் குழப்பம் ஏற்படலாம். தொழிலில் தடைகள் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் தெளிவான தொடர்பு அவசியம். நீண்ட நாள் திட்டங்களை இன்று தள்ளிப் போடுவது நல்லது.சிலருக்கு இன்று பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு. செயல்களில் அமைதி தேவை.

கடகம் (Kadagam)
கடகம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் காணக்கூடிய நாள். தொழிலில் திட்டமிட்ட செயல்கள் வெற்றிகரமாக நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவுவதால் மனதிற்கு அமைதி கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.செயல்களில் நன்மை காணப்படும் நாள். வியாபாரம், பிஸினஸ் நடத்துவோர் லாபம் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே

கருப்பு கயிறு கட்டுவதால் கிடைக்கும் பலன்கள்

https://astrologytamil.in/benefits-of-tying-a-black-rope/

சிம்மம் (Simmam)
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இன்று ஏதோ ஒரு பயம் மனதைக் கலக்கக் கூடும். அதனால் செயல்களில் கவனம் குறைவாக இருக்கலாம். வேலை சார்ந்த முடிவுகளை விரைவில் எடுக்காமல் சிந்தித்து எடுப்பது நல்லது. உடல்நலம் குறித்து கவனம் தேவை.இன்று நீங்கள் திட்டமிட்டதைவிட அதிக வேலைகள் சுமத்தப்படும். அதனால் அநாவசிய அழுத்தம் ஏற்படலாம்.

கன்னி (Kanni)
கன்னி ராசிக்காரர்களுக்கு சோர்வான உணர்வு ஏற்படக்கூடும். திட்டமிட்ட விஷயங்கள் தாமதமாகலாம். உறவுகளில் சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்.இன்றைய நாள் நல்லதொரு முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும். பழைய முயற்சிகள் இன்று பலன் தரும். மாணவர்களுக்கு இது கனிவான நாள்.

துலாம் (Thulam)
துலாம் ராசிக்காரர்கள் பல விஷயங்களில் குழப்பமடைந்த நிலைக்கு ஆளாவார்கள். தொழிலில் திட்டமிட்ட திட்டங்களை செயல்படுத்துவது சிரமமாக இருக்கும். உறவுகளில் வெளிப்படையான பேச்சு தேவையாக இருக்கும்.சில வேலைகள் தாமதமாகும். எதையும் அவசரமாக செய்ய நினைக்க வேண்டாம். தொழிலில் நிதானம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்(Viruchigam)
விருச்சிகம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் துடிப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காத்திருக்கிறது. பழைய முயற்சிகள் வெற்றி அளிக்கும். குடும்பத்தில் நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கும்.மிகவும் நன்மை தரும் நாள். புதிய திட்டங்களைத் தொடங்கலாம்.

தனுசு (Thanusu)
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றியான நாள். புதிய வாய்ப்புகள், பணியிட முன்னேற்றங்கள் மற்றும் சமூக பாராட்டுகள் கிடைக்கும். நிதிநிலை சீராக இருக்கும். உறவுகளில் மகிழ்ச்சி காணப்படும்.மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சிகள் வெற்றி பெறும். பணியிடத்தில் உயர்வும், நம்பிக்கையும் கிடைக்கும்.

மகரம் (Magaram)
மகரம் ராசிக்காரர்களுக்கு சோதனைகள் மோதும் நாள். தொழிலில் எதிர்பாராத பிரச்சனைகள் வரக்கூடும். நிதி நிர்வாகத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மனஅழுத்தம் ஏற்படக்கூடும்.அதிக வேலைச்சுமை, பயணங்கள் ஏற்படக்கூடும். கவனக்குறைவால் சில தவறுகள் நடக்க வாய்ப்பு.

கும்பம் (Kumbam)
கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நிறைந்த நாள். வேலைகள் சீராக நடைபெறும். குடும்ப உறவுகள் உறுதிப்படும். புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடும். மனதிற்கு அமைதி அளிக்கும் நாள்.தொழிலில் புது முயற்சிகள் தொடங்கலாம்.

மீனம் (Meenam)
மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று மிகச்சிறந்த நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பழைய முயற்சிகள் பயனளிக்கும். உறவுகளில் சந்தோஷம் நிலவும். நிதி நிலை முன்னேறும்.திடீர் சந்தோஷ நிகழ்வுகள் ஏற்படக்கூடும்.

marieeswari

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago