INFORMATION
திருப்பரங்குன்றத்தில் குடமுழுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான, முருகப்பெருமானின் திருத்தலமான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த குடமுழக்கு விழா, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது!
திரண்ட பக்தர்கள் கூட்டம்:
இந்த மகத்தான நிகழ்வைக் காண, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் அதிகாலை முதலே திருப்பரங்குன்றம் கோயில் முன் திரண்டனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தங்கள் வாழ்வில் ஒருமுறையேனும் இத்தகைய குடமுழக்கு விழாவைக் காண வேண்டும் என்ற பெரும் ஆவலுடன் பக்தர்கள் காத்திருந்தனர்.
இதையும் படிக்கலாமே: நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க: அங்காரகரின் அருள் வேண்டும்! https://astrologytamil.in/buy-land-get-rid-of-debt-the-grace-of-the-lord/
இன்று காலை சரியாக 5.35 மணியளவில், கோயில் கோபுர உச்சிக்குச் சென்ற சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, புனிதநீர்க் கலசங்களில் இருந்து திருமஞ்சன நீரை கோபுர கலசங்கள் மீது ஊற்றி, குடமுழுக்கை நடத்தி வைத்தனர். இந்த தெய்வீகத் தருணத்தில், பக்தர்கள் அனைவரும் ஒரே குரலில் “அரோகரா! அரோகரா!” என்று எழுப்பிய பக்தி கோஷம் விண்ணை முட்டியது. அந்த பக்திப் பரவசம், திருப்பரங்குன்றம் முழுவதையும் ஒரு தெய்வீக அதிர்வலையால் நிரப்பியது.
குடமுழுக்கு முடிந்தவுடன், கோபுர கலசங்களுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து, முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர். இந்த குடமுழுக்கு விழா, முருக பக்தர்கள் மத்தியில் அளவற்ற மகிழ்ச்சியையும், தெய்வீக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
