latest news
இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள் .
நம்முடன் வாழ்ந்தவர்கள் நம்மை விட்டு இறைவனிடம் சென்ற பின்பும் நம் கனவில் வந்து எதையாவது சொல்ல முயற்சி செய்வார்கள். நம் கனவில் நம்மை விட்டு பிரிந்தவர்கள் வருவது நன்மையா தீமையா என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள்.
கனவில் இறந்து போனவர்கள் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் .
கனவுகள் எப்படி உருவாகிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கனவுகள் என்பது நாம் மனதில் நினைப்பது மற்றும் நாம் செய்யத் தவறிய செயல்களை செய்ய துடிக்கும். நம்முடன் வாழ்ந்தவர்கள் நம்மை விட்டு இறைவனிடம் சென்ற பின்பும் நம் கனவில் வந்து எதையாவது சொல்ல முயற்சி செய்வார்கள். நம் கனவில் நம்மை விட்டு பிரிந்தவர்கள் வருவது நன்மையா தீமையா என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள். கனவில் இறந்து போனவர்கள் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் .
கனவுகள் எப்படி உருவாகிறது என்று பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது கனவுகள் என்பது நாம் மனதில் நினைப்பது மற்றும் நாம் செய்யத் தவறிய செயல்களை செய்ய துடிக்கும் நம் மனது இவைகள் நம் கனவாக தோன்றுகின்றன மேலும் அதிகாலையில் கண்ட கனவுகள் பலிக்கும் என்று சொல்வார்கள் சில சமயம் கெட்ட கனவுகளும் நம் மனதை ஆட்டம் காண வைக்கும். என்ன மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நல்ல கனவுகள் :
வானவில் நம் கனவில் தோன்றினால் நமக்கு புகழும்,மரியாதையும் கிடைக்கும். பல நட்சத்திரங்களை கனவில் கண்டால் வேளை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயிகள் கனவில் தோன்றினால் சேமிப்பு அதிகமாகும். நாம் பள்ளியில் பாடம் படிப்பது போல் கனவு கண்டால் நாம் நினைத்தது நிறைவேறும். மலையின் மேல் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பாராட்டு குவியும். பெண்கள் கனவில் தோன்றினால் நாம் தேடிக்கொண்டு இருக்கும் பொருள் நம் கையில் வந்து சேரும். நாம் வணங்கும் தெய்வங்கள் நம் கனவில் தோன்றினால் புதையல் கிடைக்கும். குழந்தைகள் கனவில் தோன்றினால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கல்யாணம் ஆகாத ஆண், பெண் பாம்பு கடிப்பது போல் கனவில் தோன்றினால் அவர்களுக்கு திருமணம் நடைபெறும். இறந்தவர்களிடம் பேசுவதைப் போன்று கனவு வந்தால் லாபம் அதிகரிக்கும், புகழும் கிடைக்கும் என்பது பொருள், இறந்தவர்கள் கனவில் நம்மை வாழ்த்துவது போல கனவு கண்டால் நன்மைகள் அதிகரிக்கும்,நண்பன் இறந்ததாக கனவு வந்தால் நண்பனின் ஆயுள் அதிகரிக்கும்.
கெட்ட கனவுகள் :
இறந்தவர்கள் அழுவது போல கனவு வந்தால் தீமை வரப்போகிறது என்று அர்த்தம் கோவிலுக்கு செல்வது நல்லது, பசுமாடு விரட்டுவது போல் கனவு வந்தால் நோய்கள் தாக்கும், சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் நம்மை விட்டு இரைவனிடம் போகப் போகிறார்கள் என்று அர்த்தம், நமக்கு அடி விழுவது போன்று கனவு வந்தால் சோகமான செய்தி வந்து சேரும், ஒருவேளை கெட்ட கனவுகள் வந்தால் கடவுளை வணங்கி விட்டு மீண்டும் உறங்கி விட வேண்டும்.
