INFORMATION
திருப்பதில ரூம் எடுக்கணும்னா இத முழுசா படிச்சிட்டு போங்க…
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதாவது, இனி திருமலையில் அறை பெற தரிசன டிக்கெட் கட்டாயம். தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அறைகள் வழங்கப்படும். தரிசன டிக்கெட் இல்லாதவர்களுக்கு அறைகள் கிடைக்காது.
தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆன்லைனில் அறை பதிவு செய்யும்போது தரிசன டிக்கெட் விவரங்களை உள்ளிட வேண்டும். திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகங்களில் தரிசன டிக்கெட்டை காண்பித்து அறைகளை பதிவு செய்யலாம். கூட்ட நெரிசலை பொறுத்து அறைகள் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: யாரிடம் கருணை காட்ட வேண்டும்? பகவத் கீதையின் பதில்? https://astrologytamil.in/to-whom-should-we-show-mercy-the-bhagavad-gitas-answer/
திருப்பதியில் ரூம்கள் புக் செய்வதற்கான கவுண்டர்கள் காலை 5 மணி முதல் தினமும் திறக்கப்பட்டு, ரூம்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது. கூட்ட நெரிசல், ரூம்கள் காலியாவதை பொருத்து காத்திருக்கும் பக்தர்களுக்கு ரூ.50, ரூ.100 கட்டணத்தில் ரூம்கள் புக் செய்து கொள்ளலாம். திருமலையில் அறை எடுத்து தங்கும் வசதியைப் பெற, கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.
