பழனி முருகனின் ஆறு முக்கிய அலங்காரங்களை தெரிந்து கொள்வோமா

பழனி முருகனின் ஆறு முக்கிய அலங்காரங்களை தெரிந்து கொள்வோமா

 

ஒவ்வொரு கடவுளுக்கும் வெவ்வேறு அலங்காரங்கள், நேரங்கள் என்று இருக்கும். அந்த நேரத்தில் தான் அலங்காரங்களை செய்வார்கள். பழனி முருகனுக்கு என்னென்ன அலங்காரம் மற்றும் அதனுடைய நேரத்தை தெரிந்துகொள்வோம்.

450 மீட்டர் உயரம் மற்றும் 690 படிகள் கொண்டது மலை.
சித்தர்களின் கட்டளைப்படி பக்தர்களுக்கு சிரசு விபூதி வழங்கப்படுகிறது.
நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழியில் பன்னீர் அபிஷேகம் நடைபெறும்.
ஒரு நாளில் ஆறு முறை அபிஷேகம் நடக்கும்.

நடை திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை.

முருகனின் அலங்காரங்கள் மற்றும் பூஜை நேரங்கள்:

காலை 06:40 AM : சன்யாசி அலங்காரம்.
காலை 08:00 AM : பாலசுப்பிரமணியர் அலங்காரம்.
காலை 09:00 AM : பாலசுப்பிரமணியர் அலங்காரம்.
மதியம் 12:00 PM : வைதிகாள் அலங்காரம்.
மாலை 05:30 PM : ராஜ அலங்காரம்.
இரவு 08:00 PM : புஷ்ப அலங்காரம்.

இந்த நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் முருகன் ஆண்டி கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

வைதிகாள் அலங்காரம்:

சந்தனக்காப்பு, பூ அலங்காரம், ஆபரணங்கள், பட்டு வேட்டி மற்றும் அங்கி, கிரீடம் ஆகியவை அணிந்து காட்சி அளிப்பார்.
இந்த கோலத்தில் இவரை வழிபடுவதால் நேர்மையான எண்ணம், நல்ல குணங்கள்,செய்யும் காரியங்களில் வெற்றி, கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை இருக்கும்.

ராஜ அலங்காரம்:

மன்னர் கோலத்தில் முருகன் காட்சி அளிப்பது ராஜ அலங்காரம் ஆகும். பட்டு வஸ்திரங்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள், கிரீடம் அணிந்து கம்பீரமாக காட்சி அளிப்பார். இந்த அலங்காரம் முருகனின் அரச குணத்தை வெளிப்படுத்துகிறது.இந்த கோலத்தில் இவரை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி, முன்னேற்றம், வீடு கட்ட, புது வீட்டில் குடியேற இவரை வழிபடலாம்.

ஆண்டிக்கோலம்:

ஆடம்பரமான உடைகள், ஆபரணங்கள் எதுவுமின்றி, மிக எளிமையான தோற்றத்தில் இருப்பார்.இந்த அலங்காரத்தில் முருகனை வழிபடுவதால் வழக்குகள் மற்றும் சட்டரீதியான பிரச்சனைகளில் வெற்றி கிடைக்கும்.ஆண்டியான முருகன் அனைத்தையும் அறிந்தவர் என்பதால், நியாயம் கிடைக்க அருள் புரிவார் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே:

மின்னலால் உடைந்து மீண்டும் இணையும் சிவலிங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

https://astrologytamil.in/do-you-know-about-the-shiva-lingam-that-gets-broken-and-reunited-by-lightning/

பாலசுப்ரமணியர் அலங்காரம்:

பாலசுப்ரமணியர் அலங்காரம் என்பது பழனி முருகனின் முக்கியமான அலங்காரங்களில் ஒன்று. இந்த அலங்காரத்தில் முருகன், இளம் வயது பாலகனைப் போல காட்சி அளிப்பார். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இவரை காண பக்தர்கள் வருகின்றனர்.இந்த கோலத்தில் இவரை வழிபடுவதால்
குழந்தை வரம் கிடைக்கும்.

வேடன் அலங்காரம்:

முருகன் வேட்டுவர்கள் அணியும் உடைகள், தலைப்பாகை ஆகியவற்றுடன் காட்சி அளிப்பார். கையில் வில் மற்றும் அம்பு போன்ற ஆயுதங்களும் இருக்கும். இந்த அலங்காரத்தில் முருகனை வழிபடுவதால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் பயம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேடன் போல் வேட்டையாடி எதிரிகளை வெல்லும் சக்தி முருகனுக்கு உண்டு என்பதை இது உணர்த்துகிறது.

புஷ்ப அலங்காரம்:

பலவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் முருகன் மிகவும் அழகாகக் காட்சியளிப்பார். மலர்களின் இயற்கையான நறுமணம் தெய்வீக சூழலை ஏற்படுத்தும்.இந்த அலங்காரத்தில் முருகனை தரிசிப்பது வாழ்வில் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தரும்.வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்.

சந்நியாசி அலங்காரம்:

இந்த அலங்காரத்தில் முருகனுக்கு ஆடம்பரமான உடைகள், ஆபரணங்கள் எதுவும் அணிவிக்கப்படுவதில்லை. மிக எளிய  ஆடையுடன், கையில் தண்டம் ஏந்தி காட்சி அளிப்பார்.
இந்த அலங்காரத்தில் முருகனை தரிசிப்பது சகல விதமான பிரச்சனைகளும் நீங்கும்.

ராஜ அலங்காரத்தின் வகைகள்:

திருத்தேர் அலங்காரம் – தேர்த்திருவிழாவின் போது  அலங்காரம்.

பவள அலங்காரம் – பவள மாலைகள்  கொண்டு செய்யப்படும் அலங்காரம்.

முத்து அலங்காரம் – முத்து மாலைகள் மற்றும் அணிகலன்களால் செய்யப்படும் அலங்காரம்.

ரத்ன அலங்காரம் – விலைமதிப்பற்ற இரத்தின கற்களால் செய்யப்படும் அலங்காரம்.

marieeswari

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago