INFORMATION
மின்னலால் உடைந்து மீண்டும் இணையும் சிவலிங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மின்னலால் உடைந்து மீண்டும் இணையும் சிவலிங்கம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள குல்லு பள்ளத்தாக்கில் “பிஜ்லி மகாதேவ்” என்ற ஒரு தனித்துவமான சிவன் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் 12 வருடங்களுக்கு ஒருமுறை மின்னலால் உடைந்து மீண்டும் தானாகவே இணைகிறது.
சிலர் இந்த மின்னல் தாக்குதலை சிவபெருமானின் தெய்வீக சக்தியின் வெளிப்பாடு எனவும்,மக்களைத் தீய சக்திகளிடமிருந்து காக்கிறார் சிவன் என கூறுகின்றனர்.
கோயிலின் பூசாரி, உடைந்த சிவலிங்கத்தின் பாகங்களை வெண்ணெய் கொண்டு சேர்த்து வைக்கிறார்.
சில மாதங்களில் அது மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுகிறது.
இதையும் படிக்கலாமே:
கணபதி ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
https://astrologytamil.in/benefits-of-performing-ganapati-homam/
இந்த நிகழ்வுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்களும் உள்ளது. குல்லு பள்ளத்தாக்கின் புவியியல் அமைப்பு மற்றும் வானிலை காரணமாக இப்பகுதியில் மின்னல் தாக்குதல்கள் அதிகம் நிகழலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே சிவலிங்கத்தை மின்னல் தாக்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிசய நிகழ்வைக் காணவும், சிவபெருமானின் அருளைப் பெறவும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிஜ்லி மகாதேவ் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இந்த கோயில் ஆன்மீக முக்கியத்துவம் மட்டுமல்லாமல், இயற்கையின் விந்தையாகவும் இருக்கிறது.
