Connect with us

பத்மாவதி அம்மன் கோவிலில் லட்ச குங்குமார்ச்சனை

My heartfelt thanks to the doctor who cured my leg pain that I had been suffering from for 3 months in 1 week.

INFORMATION

பத்மாவதி அம்மன் கோவிலில் லட்ச குங்குமார்ச்சனை

திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மன் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை காலை லட்சக் குங்குமார்ச்சனை சேவை விமரிசையாக நடைபெற்றது.

இந்து சனாதன தர்மத்தில் குங்குமத்துக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் கணவர் நீண்ட ஆயுள் பெறுவார் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி தேவியரின் பெயர்களால் அழைக்கப்படும் சக்தி தேவியின் உருவகமாக சிந்துரம் அல்லது குங்குமத்துக்கு முக்கியத்துவம் உண்டு. அம்மன் கோயில்களில் பிரம்மோற்சவம் போன்ற பெரிய திருவிழாக்களை நடத்துவதற்கு முன்பு அர்ச்சகர்கள் லட்சக் குங்குமார்ச்சனை செய்வது வழக்கம். இந்த சிறப்பு சேவையின் மூலம் அம்மன் பிரசன்னமாகி திருவிழா எந்தவித இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக நடைபெற ஆசிர்வதிப்பார் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே: 
அய்யப்ப பக்தர்கள் கூடுதல் நேரம் தரிசனம் 
https://astrologytamil.in/ayyappa-devotees-have-extra-time-for-darshan/

இந்த நிகழ்ச்சியில் ஜேஇஓ ஸ்ரீமதி கௌதமி, கோயில் துணை இஈவோ ஸ்ரீ கோவிந்தராஜன், பாஞ்சராத்திர ஆகம ஆலோசகர் ஸ்ரீ மணிக்கந்த பட்டர், அர்ச்சகர் ஸ்ரீ பாபுஸ்வாமி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

More in INFORMATION

To Top