Connect with us

அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும் (காகல யோகம்)

Luck should be like this (Kakala Yoga).

Astrology

அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும் (காகல யோகம்)

ஜோதிடத்தில் பல்வேறு யோகங்கள் உள்ளன, ஒவ்வொன்றும் தனித்துவமான பலன்களை தருகின்றன. அத்தகைய சிறப்பு யோகங்களில் ஒன்றுதான் “காகல யோகம்”. இந்த யோகம் யாருக்கு கிடைக்கும்? எப்படி உருவாகிறது? இதன் பலன்கள் என்னென்ன? இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.

காகல யோகம் எப்படி உருவாகிறது?

  • லக்னாதிபதி, 4ஆம் அதிபதி மற்றும் 9ஆம் அதிபதி ஆகிய மூன்று கிரகங்கள் காகல யோகத்திற்கு முக்கியமானவை.
  • இந்த மூன்று கிரகங்களும் ஒருவருக்கொருவர் கேந்திர (1, 4, 7, 10) ஸ்தானங்களில் அமைந்திருக்க வேண்டும்.
  • மேலும், இந்த மூன்று கிரகங்களில் ஒன்று ஆட்சி அல்லது உச்ச நிலையில் இருக்க வேண்டும்.

இந்த மூன்று அமைப்புகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால், ஜாதகருக்கு காக யோகம் உண்டாகும். ஆனால், இந்த யோகம் பலன் தர, மூன்று கிரகங்களில் ஒன்று ஆட்சி அல்லது உச்ச நிலையில் இருப்பது அவசியம்.

ஆன்மீகத்தின் உண்மை உருவம் https://astrologytamil.in/2024/06/23/what-is-aanmeegam/

  • மேஷ லக்னத்தை எடுத்துக் கொள்வோம்.
  • இதில், லக்னாதிபதி செவ்வாய், 4ஆம் அதிபதி சந்திரன் மற்றும் 9ஆம் அதிபதி குரு.
  • 4ஆம் இடத்தில் சந்திரன் ஆட்சி பெற்று, அங்கு குருவும், லக்னத்தில் செவ்வாயும் இருந்தால் காகல யோகம் உண்டாகிறது.
  • 9ஆம் இடத்தில் குரு ஆட்சி பெற்று அங்கேயே சந்திரன் இருந்து, மீனத்தில் செவ்வாய் இருந்தாலும் காகல யோகம் உண்டாகிறது.

காகல யோகத்தின் பலன்கள்:

  • பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம்
  • தொழில் விருத்தி, முன்னேற்றம்
  • சமுதாயத்தில் தலைமை பொறுப்பு
  • வளர்ச்சி பாதையில் பயணம்
  • தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் வளர்த்தல்
  • அதிகாரம் மிக்க சபைகளுக்கு தலைமை
  • கூட்டத்தை வழிநடத்தல்
  • நேர்வழியில் நடத்தல்
  • ஆலயங்கள் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல்
  • நல்ல குழந்தை பேறு
  • மேலும் 11 வகையான செல்வங்கள்

More in Astrology

To Top