Connect with us

யார் இந்த வண்டி மலைச்சி, எவ்வாறு தெய்வமானார்?

வண்டி மலச்சி அம்மன் வரலாறு

latest news

யார் இந்த வண்டி மலைச்சி, எவ்வாறு தெய்வமானார்?

தென்தமிழகத்து சொந்தக்காரி வண்டிமலைச்சி வண்டிமலைச்சி அம்மன்.

தென்தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அதிகம் வழிடும் நாட்டுப்புறத் தெய்வம். படுத்த கோலத்தில் இருக்கும் சிலைகள் பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டிருக்கும் வண்டிமலைச்சி அம்மன் சாலை காவல் தெய்வமாகவும் பெரும்பாலும் முச்சந்திகள் உள்ள இடத்தில் வண்டிமலையச்சி, வண்டிமலையனுடன் படுத்த கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

அண்ணன் தங்கை – வண்டி மலையான்,வண்டி மலைச்சி
வண்டி மலையனையும், வண்டி மலையச்சியையும் அண்ணன் தங்கை ஆவர். பண்டைய காலத்தில் தாய், தந்தையை இழந்த அண்ணன் தங்கை உணவு தேடி சென்றனர் களைப்பில் நெசவாளர் குடியில் புகுந்து அங்கே நூலுக்குக் கஞ்சிபோட வைத்திருந்த கஞ்சி கண்டு பசியால் கஞ்சியை குடித்தனர்.

ஆனால் இவர்களின் நிலையை அறியாத ஊர் மக்கள் தவறாக திருடர்கள் என தவறாக எண்ணி அவர்கள் இருவரையும் தண்டித்தது இறுதியில் இருவரும் மரணித்தனர். அவர்கள் மரணத்திற்கு பின்னர் அந்த பகுதியில் மக்கள் பயணம் செய்ய அச்சப்பட்டனர் அவ்வாறு பயணம் செய்தலும் யாதேனும் துர் சம்பவங்கள் நடைபெற்றன.

அதன் பின்பு மக்கள் தங்கள் தவறை உணர்ந்து இருவரின் சகோதரத்துவத்தை போற்றும் வகையிலும், பயணம் கொள்வோருக்கு வழி துணையாக வழிபட எண்ணினர். அன்று முதல் வண்டிமலைச்சி மற்றும் வண்டிமலையன் ஆகிய இருவரின் உருவங்களை மண்ணில் உருவமான வடித்து வழிபட தொடங்கினர்.
இருவரின் நினைவாக தென் தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் சாலைகளில் எல்லை தெய்வமாக விளங்குகிறார்கள். வாழ்ந்து,மறைத்த இவர்களை போன்றவர்களின் பாரம்பரிய சிறு தெய்வ வழிபாட்டினை போற்றுவோம்…தமிழர் மரபினை மறவாமல் காப்போம்…

More in latest news

To Top