latest news
ஆடி மாதத்தில் வரும் ஔவையார் விரதத்திற்கு இவ்வளவு பலனா ?
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் அவ்வையார் விரதம் மேற்கொள்வது செழிப்பான வாழ்க்கை, நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை கிடைக்க வழிவகுக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கை.
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில், வீடுகளிலும், கோவில்களிலும் அம்பிகை வழிபாடு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக, ஆடி செவ்வாய் அன்று பெண்கள் ஒன்று கூடி அவ்வையார் விரதம் மேற்கொள்வார்கள்.
ஆடி செவ்வாய் இரவு, ஊரில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண் தனது வீட்டில் மற்ற பெண்களுடன் இணைந்து பச்சரிசி மாவினால் உப்பில்லா கொழுக்கட்டை தயார் செய்து அவ்வையாருக்குப் படைத்து அவ்வையாரின் வரலாறு மற்றும் நீதிக்கதைகளை மற்ற பெண்களுக்கு கூறி வழிபாடு நடத்துவார்.
இதையும் படிக்கலாமே:
கணபதி ஹோமம் https://astrologytamil.in/ganapati-homam/
இந்த விரதம் இரவு நேரத்தில் மட்டுமே கடைபிடிக்கப்படும்.
நம்பிக்கை:
இவ்விரதத்தினை மேற்கொள்வதால் வளமான வாழ்வும், நீண்ட ஆயுளும், மாங்கல்ய பலனும் கிடைப்பதாக நம்பிக்கை.
கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
வழிபாட்டு முறை:
அவ்வையார் விரத வழிபாட்டை தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் செய்யலாம்.
ஆடி மாதத்தில் விரதமிருக்க முடியாதவர்கள் தை மற்றும் மாசி மாதங்களில் விரதம் இருக்கலாம்.
திருமண தடை தோஷம் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் விதவிதமான கொழுக்கட்டைகளை படைத்து வழிபடுவது வழக்கம்.
