Connect with us

அனுமனுக்கு ஏன் வடமாலை சாற்றப்படுகிறது

அனுமனுக்கு ஏன் வடமாலை சாற்றப்படுகிறது

INFORMATION

அனுமனுக்கு ஏன் வடமாலை சாற்றப்படுகிறது

அனுமனுக்கு ஏன் வடமாலை சாற்றப்படுகிறது

 

விசேஷ தினங்களில் அனுமன் கோவில்களில் வடைமாலை சாற்றி வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வடமாலை ஏன் சாற்றப்படுகிறது தெரியுமா ?

அனுமன் சிறுவனாக இருந்தபோது சூரியனைப் பிடிக்க முயன்றார். அதே நேரத்தில் ராகுவும் சூரிய கிரகணத்திற்காக சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இந்த போட்டியில் வாயுவின் மகனான அனுமன் எளிதில் வெற்றி பெற்றார்.
அனுமனின் வீரத்தை பாராட்டிய ராகு, உளுந்தால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மாலையாக அணிவித்து அனுமனை வழிபடுபவர்களுக்கு ராகு தோஷத்தின் தாக்கம் குறையும் என்று வரம் அளித்தார்.
இதன் காரணமாகவே வடமாலை சாற்றப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:

காகத்திற்கு உணவு அளிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

https://astrologytamil.in/benefits-of-feeding-crows/

வடமாலை என்பது பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறவும், அனுமனின் அருளைப் பெறவும் இந்த மாலையை சாற்றுகிறார்கள்.
அனுமனுக்கு 27, 54, 108, 1,008 என்ற எண்ணிக்கையில் வடைகள் கோர்க்கப்பட்டு வடைமாலை சாற்றப்படும் வழக்கம் இருந்து வருகிறது.
அனுமன் வலிமை, தைரியம் மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக வணங்கப்படுவதால் வடமாலை சாற்றுவது பக்தர்களுக்கு தைரியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது.
சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வடமாலை சாற்றுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றவும், ராகு தோஷத்தின் பாதிப்பிலிருந்து விடுபடவும் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.

More in INFORMATION

To Top