latest news
சிவனுக்கு ஏன் நாகலிங்க பூவிவை வைத்து வழிபடுகிறோம்..
சிவ பெருமானுக்கு வில்வம் மிகவும் பிடித்தது. நாம் அனைவரும் வில்வ மரத்தை கோவில்களில் பார்த்து இருப்போம் அதேபோல நாகலிங்கப்பூவும் சிவ பெருமானுக்கு பிடித்த பூவாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நாகலிங்க பூ பார்ப்பதற்கு சிவன் தலையில் ஐந்துதலை நாகம் படம் பிடிப்பது போல அமைந்திருக்கும். இதன் காய்கள் நாம் பார்ப்பதற்கு பந்துகள் போல காணப்படுகிறது.இந்த நாகலிங்க பூ வெளிநாட்டிலும் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. இந்த பூ செடியில் பூப்பதில்லை அதற்கு பதிலாக வேர்ப்பகுதிக்கு மேலேயும், கிளைப்பகுதிக்கு கீழேயும் ஒரு கிளையை உருவாக்கி அதில் பூக்கிறது. நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் 1000 மலர்கள் வரை பூக்கும்.
நாகலிங்கப்பூவை வைத்து சிவனுக்கு வழிபாடு செய்யும் போது பல பிரதோஷங்கள் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நாகலிங்க பூவிற்கு மகரிஷிகள் தவ ஆற்றலை அளித்துள்ளதாக புராணங்கள் சொல்லப்படுகிறது. நாகலிங்கப் பூவை தொடுவது என்பது மிக எளிது அல்ல சிவபஞ்சாக்ஷரத்தை 1001 முறை சொன்ன பிறகே தொட வேண்டும். எதற்கு அப்படி செய வேண்டும் என்றால் அந்த பூ மகிமை உடையதாக கருதப்படுகிறது.
ஒரு நாகலிங்கப்பூவை சிவனுக்கு சூடிய பிறகு அது வாடினால் நாம் குளித்துவிட்டு தான் அந்த வாடிய மலரை தொட வேண்டும். அதன் சக்தி ஏப்போதும் அந்த பூவை விட்டு விலகுவதில்லை. காய்ந்த நாகலிங்கப் பூவை ஓடும் ஆற்றில் விடவேண்டும். இந்த மரம் தமிழ்நாட்டில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சிமலை பகுதியிலும் காணப்படுகிறது.
நாகலிங்கப்பூவை சுவாசிக்கும் போது அதில் இருக்கும் மணம் நம் நோய்களை குணமாகும். இந்த பூவிலிருந்து நாம் உபயோகப்படுத்தும் வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். நாகலிங்க மர இலைகள் உதிர்ந்து காணப்பட்டால் அந்த இடத்தில் காற்று மாசுபாடு இருக்கிறது என்பது பொருள் நாகலிங்க மலர் செல்வத்தை கொடுபதொடு பல மடங்கு சக்தியும் கொடுக்கிறது. இதன் இலைகள் தோல் சமந்தமான நோய்களை குணமாக்கும் இதன் மர பட்டைகள் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த நாகலிங்க மரத்தில், நிறைய மருத்துவ குணம் இருப்பதால், இதை ஒரு அபூர்வ மரமாகவே கருதுகிறார்கள்.
