Connect with us

காசியில் இந்த 5 நபர்களின் உடல்களை எரிக்க முடியாது ஏன் தெரியுமா?

காசியில் இந்த 5 நபர்களின் உடல்களை எரிக்க முடியாது ஏன் தெரியுமா?

INFORMATION

காசியில் இந்த 5 நபர்களின் உடல்களை எரிக்க முடியாது ஏன் தெரியுமா?

காசியில் இந்த 5 நபர்களின் உடல்களை எரிக்க முடியாது ஏன் தெரியுமா?

 

காசியில் பொதுவாக இந்துக்கள் இறந்தவர்களின் உடல்களை எரிப்பது முக்தி அளிக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், சில குறிப்பிட்ட நபர்களின் உடல்களை அங்கு எரிப்பதில்லை. அந்த 5 நபர்கள் மற்றும் அதற்கான காரணங்கள் பார்ப்போம்.

குழந்தைகள்

12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல்களை காசியில் எரிப்பதில்லை. அவர்கள் தூய்மையான ஆத்மாக்கள் என்றும், அவர்களுக்கு மரணச் சடங்குகள் தேவையில்லை. அதனால், அவர்களின் உடல்களை கங்கையில் விடுவார்கள் அல்லது புதைப்பார்கள்.

சாதுக்கள்

துறவிகள் மற்றும் புனிதமான நபர்களின் உடல்களும் எரிக்கப்படுவதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்தவர்கள் என்பதால், அவர்களின் உடல்கள் புனிதமாகக் கருதப்படுகின்றன. அவர்களை பெரும்பாலும் கங்கையில் சமாதி வைப்பார்கள் அல்லது புதைப்பார்கள்.

பாம்பு கடித்து இறந்தவர்கள்

பாம்பு கடித்து இறந்தவர்களின் உடலில் 21 நாட்கள் வரை விஷம் இருக்கும் . அதனால், அவர்களின் உடல்களை எரித்தால் விஷம் பரவக்கூடும் என்று கருதி, அவர்களை எரிப்பதில்லை. அவர்களின் உடல்களையும் கங்கையில் விடுவார்கள்.

இதையும் படிக்கலாமே:பழனி முருகனின் ஆறு முக்கிய அலங்காரங்களை தெரிந்து கொள்வோமா

https://astrologytamil.in/lets-know-the-six-main-decorations-of-palani-murugan/

கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்களின் உடல்களை எரிப்பதில்லை. வயிற்றில் இருக்கும் குழந்தை இன்னும் உலகைப் பார்க்காததால், தாயையும் சேயையும் ஒன்றாக எரிப்பது முறையல்ல. அதனால், அவர்களின் உடல்களையும் கங்கையில் விடுவார்கள்.

தொழுநோயாளிகள்

தொழுநோயால் இறந்தவர்களின் உடல்களையும் காசியில் எரிப்பதில்லை. இது ஒரு சுகாதாரக் காரணமாக இருப்பதால் அவர்களின் உடல்களை கங்கையில் விடுவது வழக்கம்.

இந்த 5 வகையான நபர்களைத் தவிர, மற்ற இந்துக்களின் உடல்கள் காசியில் எரிக்கப்பட்டு, அவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கப்படுகிறது.காசியின் மணிகர்ணிகா மற்றும் ஹரிச்சந்திரா காட் ஆகியவை இதற்கான முக்கியமான இடங்களாகக் கருதப்படுகின்றன.

More in INFORMATION

To Top