Connect with us

திருப்பதி கபிலேஸ்வர கோயிலில் காலபைரவர் ஹோமம்

Kala Bhairava Homam at Tirupati Kapileshwar Temple

INFORMATION

திருப்பதி கபிலேஸ்வர கோயிலில் காலபைரவர் ஹோமம்

திருப்பதி கபிலேஸ்வர கோயிலில் இன்று (சனிக்கிழமை) காலபைரவர் ஹோமம் சிறப்பாக நடைபெற்றது.

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கோயிலில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வரை ஹோம மஹோத்சவங்கள் நடைபெற உள்ளன.

இதன் ஒரு பகுதியாக, யாகசாலையில் காலை 9 மணி முதல் 12 மணி வரை பூஜை, அஷ்டபைரவர் ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலச உத்வாசனம், மகா சாந்தி அபிஷேகம், காலபைரவர் மூலவர்களுக்கு கலசாபிஷேகம், நைவேத்தியம், ஆரத்தி ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை சண்டிகேஸ்வரர் கலசஸ்தாபனை, பூஜை, ஜபம், ஹோமம், விசேஷ தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

இதையும் படிக்கலாமே: 
பகவத் கீதை உணர்த்தும் இரு உலகங்கள் 
https://astrologytamil.in/the-two-worlds-that-the-bhagavad-gita-reveals/

ஹோம மஹோத்சவங்களின் இறுதி நாளான டிசம்பர் 1ஆம் தேதி சண்டிகேஸ்வரர் ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலர் திரு. தேவேந்திரபாபு, கோயில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

More in INFORMATION

To Top