latest news
பண கஷ்டம் வராமல் இருக்க பரிகாரம்
அனைவருக்கும் பணக்கஷ்டம் வருவது இயல்பாக நடக்கக்கூடிய விஷயம் தான். சேமிக்கும் பழக்கம் இல்லாமல் போனால் தான் வருமானம் இல்லாத போது பணக்கஷ்டம் வருகிறது. பணம் வரும் நேரத்தில் அதை முழுவதுமாக செலவு செய்யக் கூடிய பழக்கத்தை கொண்டவர்கள், கஷ்டங்களை சிகப்பு கம்பளம்கொண்டு வரவேற்பவர்கள் ஆவர்.உங்களிடம் பணம் இல்லாத போது யாரை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஆன்மீக ரீதியாக இந்த பணத்தட்டுப்பாடு வராமல் இருக்கவும், பண வரவை அதிகப்படுத்தும் பரிகாரத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகின்றோம்.
பண கஷ்டம் தீர செல்வம் பெருக தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து விடுங்கள். குளித்து முடித்த பிறகு கல் உப்பை உங்களுடைய இடது கையின் நிரம்ப எடுத்துக் கொள்ளுங்கள். வருமானம் பெருக வேண்டும், செல்வ செழிப்பு உயர வேண்டும். மஹாலக்ஷ்மியின் அருளாசி கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து 27 முறை உங்களுடைய தலையை சுற்றி, உப்பை தண்ணீரில் கரைத்து நீங்கள் குளித்த இடத்தில் கொட்டி விடுங்கள். இதனால் உங்கள் நெகட்டிவ் எனர்ஜி விலகிவிடும் .
தினமும் இதை தொடர்ந்து செய்வதால் உங்களுக்கு கண் திருஷ்டியாலோ, எதிர்மறை ஆற்றலாலோ எந்த பாதிப்பும் வராது.இந்த பரிகாரத்தை தொடர்ந்து 48 நாள் செய்யவேண்டும் .
வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரும்.வருமானம் வரும் போது சேமித்து வைத்துக் கொள்வது உங்கள் மிக முக்கியம் .அந்த நெகட்டிவ் எனர்ஜியை உங்களிடம் இருந்து போய்விட்டாலே பெரும் அளவு கஷ்டத்தில் இருந்து தப்பித்து விடுவீர்கள்.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இறை நம்பிக்கையோடு அதை எதிர்கொள்ளுங்கள் இறைவன் நினைத்தால் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை வையுங்கள் நன்றி
