latest news
அமாவாசை இரவு அன்று கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரம்
அமாவாசை தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித நாள். அதேசமயம், பல நல்ல செயல்களை செய்ய ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது. கடன் தொல்லையில் இருந்து விடுபட விரும்புபவர்கள், அமாவாசை இரவில் சில எளிய பரிகாரங்களை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே:
அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பது
https://astrologytamil.in/feeding-the-crow-on-the-new-moon-day/
பரிகாரங்கள்:
அமாவாசை இரவில், வீட்டின் வாசலில் அல்லது பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். விளக்கில் நெய் அல்லது எண்ணெய் பயன்படுத்தலாம். விளக்கை ஏற்றி வைத்து, குபேரன், லட்சுமி தேவி போன்ற செல்வ வளத்தை அளிக்கும் தெய்வங்களை வழிபடுங்கள். அரிசி, பருப்பு, உப்பு போன்ற பொருட்களை ஏழைகளுக்கு தானமாகக் கொடுங்கள். உங்கள் வசதிக்கேற்ப, பழங்கள், துணிமணிகள் போன்றவற்றையும் தானமாகக் கொடுக்கலாம். கணபதி மந்திரம், லட்சுமி மந்திரம் போன்ற செல்வத்தை தரும் மந்திரங்களை ஜெபிக்கலாம். அமாவாசை நாளில் ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பது, கடன் தொல்லையை நீக்கும்.
அமாவாசை அன்று திருஷ்டி கழிக்கும் முறை:
மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய இந்த அமாவாசை திதியில் வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டி சுற்றி போடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அமாவாசை திதியிலும், திஷ்டி கழித்தால் நம்முடைய கஷ்டங்கள் நம்மை விட்டு விலகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று இரவு 9 மணிக்கு மேல் உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் எளிமையான முறையில் கண் திருஷ்டி கழிக்க வேண்டும். கல் உப்பு சுற்றி போடலாம், அல்லது வர மிளகாய் கல் உப்பு கடுகு இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து சுற்றி போடலாம். அப்படி இல்லை என்றால் வெறும் கற்பூரம் கூட ஏற்றி சுற்றி போடலாம், அல்லது எலுமிச்சம் பழத்தை சுற்றி அதை இரண்டாக நறுக்கி இரண்டு திசைகளில் தூக்கி தூரப் போடுவது, கண் திருஷ்டியை முழுமையாக நீக்கும்.
