Connect with us

நந்தி பகவானுக்குரிய கோயில்கள்

nandi bhagavan temple

INFORMATION

நந்தி பகவானுக்குரிய கோயில்கள்

நந்தி பகவானுக்குரிய கோயில்கள்

நந்தி பகவான், சிவபெருமானின் வாகனமாகவும், அவருடைய அருகில் எப்போதும் இருப்பவராகவும் போற்றப்படுபவர். இவர் தனிக்கோயில்களிலும், சிவாலயங்களில் உப தெய்வமாகவும் வழிபடப்படுகிறார். இந்தியா முழுவதும் பல நந்தி கோயில்கள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான கோயில்கள் பற்றி இங்கு காண்போம்.

1. திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்

நந்தி பகவானுக்கு திருமணம் நடக்கும் ஒரே கோயில் இதுவே. ஆண்டுதோறும் நந்தி பகவானின் திருக்கல்யாணம் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமழபாடி அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில்

2. பெங்களூர் பசவன் குடி நந்தி

15 அடி உயரத்தில் முறைத்துப் பார்த்தபடி படுத்திருக்கும் பிரமாண்டமான நந்தி சிலை. ஆனி மாத வியாழக்கிழமைகளில் பசவனுக்கு கடலைக்காய் நைவேத்யமும் கடலை வெல்லம் உருண்டையிலான மாலையும் அணிவிப்பர்.

3. தஞ்சை பெரிய கோவில்

விமானத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றும் 10 டன் எடையுடன் கூடிய ஒரே கல்லால் ஆன 8 நந்திகள் உள்ளன. தஞ்சை பெரிய கோவில் விமானத்தில் உள்ள நந்திகள்

இதையும் படிக்கலாமே :
குரு பகவான் வக்ர பெயர்ச்சி என்ன மாற்றம் வரப்போகிறது? 
https://astrologytamil.in/what-change-is-coming-to-guru-bhagavan-vakra-prairajc

4. திருவத்திபுரம் சிவன் கோவில்

நந்திதேவர் மூலவரைப் பார்க்காமல் கோவிலின் வெளிவாயிலை பார்த்தபடி இருக்கிறார்.  இது மற்ற கோயில்களில் காணப்படாத ஒரு அமைப்பு.

5. வட திருமுல்லைவாயில் கோவில்

நந்தி கருவறை நோக்கி அமராமல் கொடி மரம் நோக்கி அமர்ந்துள்ளது.

6. சுசீந்திரம் கோவில்

பெரிய நந்தி சங்குகளை இழைத்து அதன் மூலம் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது.

7. நந்தியால்

பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி போன்ற நவ நந்திகள் உள்ளன. இவற்றை தரிசிப்பவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

8. திருநாகேசுவரம்

அதிகார நந்தியின் விக்ரக வடிவம் சிவபெருமானின் அருளால் வாள் பெற்றதால் வாளுடன் காட்சி தருகிறது.

9. பெங்களூர் அல்சூர் சோமேஸ்வரர் கோவில்

நந்தியின் மீது சாய்ந்து கொண்டு பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சொல்கிறார்கள்.

இவை தவிர, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரமாண்டமான நந்தி சிலைகள் உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் நந்தி பகவானை வழிபடும் முறைகள் மற்றும் ஐதீகங்கள் வேறுபட்டிருக்கும்.

More in INFORMATION

To Top