INFORMATION
இரண்டு நாட்களில் 1,72,565 பேர் திருப்பதி தரிசனம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு வார இறுதி நாட்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் அதிகமான பக்தர்கள் திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த வார இறுதியில் மட்டும் 1,72,565 பேர் ஸ்ரீவரை தரிசித்துள்ளனர். சனிக்கிழமை 88,076 பேரும், ஞாயிறுக்கிழமை 84,489 பேரும் ஸ்ரீவரை தரிசித்தனர்.
நாராயணகிரி ஷெட்களில் புதிதாக அமைக்கப்பட்ட சேவை வரிசை காரணமாக பக்தர்கள் காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.
இதையும் படிக்கலாமே: ஸ்ரீ கிருஷ்ணரின் பதினாறாயிரம் மனைவிகளை எப்படி மணந்தார்? https://astrologytamil.in/how-did-sri-krishna-marry-sixteen-thousand-wives/
இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொதுத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
