latest news
12 ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய முருகன் கோவில்கள்
நாம் கோவில்களுக்கு சென்று கடவுளை வழி படுவதினால் நமக்கு, மன அமைதி மற்றும் நாம் தேடும் ஒன்று நம் கையில் வந்து செருவதற்காக, அன்றாடம் நாம் அனைவரும் கடவுளை வழிபாடு செய்கிறோம்.
அந்த வகையில் 12 ராசிக்காரர்கள் எந்த முருகன் கோவிலுக்கு சென்று வறுவது நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி முருகனை வழிபட்டு வந்தால் வாழ்வில் நல்ல முன்னெற்றம் கிடைக்கும்
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் மனஅமைதி கிடைக்கும், குழப்பங்களும் நீங்கும்.
மிதுனம் மற்றும் கன்னி ராசியினர் பழமுதிர் முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் உடல் ரீதியான பிரச்னைகள் அகலும்.
கடக ராசிகாரர்கள் திருத்தணி முருகனை தரிசித்து வந்தால் வாழ்வில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சிம்மம் மற்றும் மகர ராசிகாரர்கள் படிகள் ஏறிச்சென்று பழனி முருகனை வணங்கினால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகற்கள் படிகற்களாகும்.
தனுசு மற்றும் மீன ராசிகாரர்கள் சுவாமி மலை முருகரை வழிபாடு செய்தால் துன்பங்கள் மற்றும் கடன்கள் முற்றிலும் நீங்கும்.
கும்ப ராசியில் இருப்பவர்கள் மருதமலை சென்று முருகனை வழிபட்டு செய்தால் வாழ்வின் இன்னல்கள் நீங்கி சந்தோசம் நிலைக்கும்.
இறைஅருளால், நலமுடன் இருப்போமாக…
