daily astrology
இன்றைய (30 ஏப்ரல் 2025) ராசிபலன்
இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…
மேஷம் (Aries)(Mesham)
சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.குடும்பத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.பொருளாதாரம் உயர்ந்து மன நிம்மதி ஏற்படும்.
அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் பொறுப்புகள், அழுத்தம் அதிகரிக்கும்.
ரிஷபம் (Taurus)(Risabam)
நீண்ட நாட்களாக இழுத்தடித்த காரியங்கள் நன்றாக நிறைவு பெறும்.
பயணங்களின்போது எச்சரிக்கை தேவை.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
மிதுனம் (Gemini)(Mithunam)
பேச்சிலும் செயலிலும் நிதானமும் பொறுமையும் மிக அவசியம்.
அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம்
கடகம் (Cancer)(Kadagam)
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.கணவன் – மனைவி இடையில் பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.புதிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.
இதையும் படிக்கலாமே: திருமலை 2025 ஆம் ஆண்டு மே மாத முக்கிய உற்சவங்கள் https://astrologytamil.in/important-festivals-in-may-2025-in-tirumala/
கன்னி (Virgin)(Kanni)
வருமானத்துக்கு குறை இருக்காது.ஆரோக்கியக் குறைபாடு உண்டாகக் கூடும்.வியாபாரத்தை முன்னிட்டு சிலர் வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
துலாம் (Libra)(Thulam)
புதிய வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும்.குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுமூகமாக முடியும். பொருளாதார நிலை மேம்படும்.
விருச்சிகம் (Scorpio)(Viruchigam)
வரவுக்கேற்ற செலவுகளும் இருக்கும். கணவன் – மனைவி ஒன்று சேருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.சக பணியாளர் களும் இணக்கமாகப் பழகுவார்கள்.
தனுசு (Sagittarius)(Thanusu)
உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைவு இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும்.
விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மகரம் (Capricorn)(Magaram)
வீடு மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது.
கும்பம் (Aquarius)(Kumbam)
பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும்.கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள்.அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும்.
மீனம் (Pisces)(Meenam)
பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். பொருளாதார வரவு நன்றாக இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.குடும்பத்தில் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து நலமுடன் இருப்போமாக…
