இன்றைய (27 மே 2025) ராசிபலன்

இன்றைய (27 மே 2025) ராசிபலன்

 

இன்றைய 12 ராசிகளுக்குமான பலன்கள் துல்லியமாக கொடுக்கப்பட்டுள்ளது.இறைஅருளால் இந்த நாள் உங்களுக்கு நலமாக இருப்பதாகுக…

மேஷம் (Mesham)(வெற்றி)

இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றியுடன் தொடங்கும் நாள். நீங்கள் எடுத்த முடிவுகள் சரியாக அமையும். தொழிலில் முன்னேற்றம் தெரியும். நீண்ட நாள் கனவுகள் இன்று ஓரளவு நனவாகும். உங்கள் முயற்சிக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் பாராட்டுவர். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் (Risabam)(சலனம்)

சில நிமிடங்களில் மகிழ்ச்சி, சில நிமிடங்களில் குழப்பம் என்றே இன்றைய நாளை எதிர்நோக்கலாம். மனநிலை சீராக இருக்காது. சிறிய விஷயங்கள் கூட பெரிதாகத் தெரியும். வீண் பதற்றம் உண்டாகலாம். தொழில், குடும்பம் என இருபுறமும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

மிதுனம் (Mithunam)(பயம்)

இன்றைய நாள் உங்களுக்கு எதிர்பாராத பயங்களை ஏற்படுத்தலாம். மனதுக்குள் ஏற்படும் அவசரச் சிந்தனைகள் உங்களைத் திசைமாறச் செய்யும். யாருடைய பரிந்துரையையும் கேட்டு செயல்படுங்கள். நிதானமாக செயல்பட்டால் சிறந்த முடிவுகள் கிடைக்கும். பயம் காரணமாக ஒரு நல்ல வாய்ப்பை இழக்கக்கூடாது.

கடகம் (Kadagam)(கோபம்)

இன்று கடக ராசிக்காரர்கள் சற்று சலிப்பாகவும், கோபமாகவும் இருப்பார்கள். எதையும் விட்டுக்கொடுக்காமல் பேச்சு வாயிலாக வாதம் செய்யும் வாய்ப்பு அதிகம். இது குடும்பம், வேலை என எந்த துறையிலும் பிரச்சனையை உண்டாக்கலாம். பொறுமை மிக முக்கியம். கோபத்தை கட்டுப்படுத்தினால் பல நன்மைகள் கிட்டும்.

சிம்மம் (Simmam)(பரிசு)

இன்று சிம்மராசிக்காரர்கள் எதிர்பாராத பரிசுகளை பெறலாம். இது நேரடி பரிசாகவோ அல்லது வாழ்த்துகளாகவோ இருக்கலாம். உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். குழந்தைகள், மாணவர்கள் தொடர்பான விஷயங்களில் சந்தோஷம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சாத்தியம் உள்ளது.

இதையும் படிக்கலாமே:சொந்த வீடு வாங்கும் யோகம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?சொந்த வீடு வாங்க  எளியபரிகாரம்

https://astrologytamil.in/what-should-be-done-to-get-the-yoga-of-buying-your-own-house-simple-remedies-for-buying-your-own-house/

கன்னி (Kanni)(ஆர்வம்)

புதிய விஷயங்களைச் செய்யும் ஆர்வம் உங்களிடம் அதிகமாக இருக்கும். புதிய திட்டங்களை உருவாக்கக்கூடிய நாள். திட்டங்களை செயல்படுத்தத் தேவையான ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். நண்பர்களின் உதவி இருக்கும். புது கற்றல்கள், பயணங்கள் சாத்தியம்.

துலாம் (Thulam)(இன்பம்)

துலாம் ராசிக்காரர்கள் இன்று மனநிறைவையும், அமைதியையும் அனுபவிப்பார்கள். குடும்பத்தில் இனிமை அதிகரிக்கும். திருமண பேச்சுகள், புது உறவுகள் போன்றவை கைகூடும். உங்களின் பேச்சாற்றல் மற்றவர்களை கவரும். உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு கிடைக்கும்.

விருச்சிகம்(Viruchigam)(துணிவு)

விறுவிறுப்பான நாள். துணிச்சலுடன் புதிய காரியங்களைத் தொடங்குவீர்கள். பயமின்றி முடிவெடுப்பீர்கள். தொழிலில் முக்கியமான மாற்றங்கள் செய்யும் நாளாக அமையும். சஞ்சலமில்லாமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். உங்கள் மனதின் தூண்டுதலை நம்புங்கள்.

தனுசு (Thanusu)(நல்லது)

இன்று அனைத்து வேலைகளும் சீராக நடைபெறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பிரச்சனைகள் ஓரளவு தீர்வுகள் காணும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். ஆன்மிக சிந்தனைகள், நற்காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

மகரம் (Magaram) (ஜயம்)

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பலவகையான ஜயங்கள் காத்திருக்கின்றன. தொழிலில் லாபம், போட்டிகளில் வெற்றி, சமூகத்தில்  நண்பர்கள், உறவுகள் உங்களை பாராட்டுவர். வழக்குகள், வாக்குவாதங்களில் சாதகமான முடிவுகள் வந்துசேரும்.

கும்பம் (Kumbam)(இரக்கம்)

மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் சிறிய உதவிகளும் பெரிய பாராட்டாக மாறும் நாள். சனி பகவான் உங்களுடன் இருக்கிற மாதிரி ஒரு அமைதி நிலை ஏற்படும். ஆன்மிக சிந்தனைகளும் கூட இருக்கும்.

மீனம் (Meenam)(இரக்கம்)

மீனராசிக்காரர்களுக்கு இன்று பாசமும் அன்பும் நிரம்பிய நாளாக அமையும். குடும்ப உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள். மனதை நிம்மதியாக வைத்துக் கொள்ள முடியும். புதிய உறவுகள் பிறக்கும்.

உங்கள் ராசிபலன்களை தினந்தோறும் துல்லியமாக பெற தொடர்ந்து இணைந்திருங்கள். இறைஅருளால் இந்நாள் நன்னாளாக அமைந்து நலமுடன் இருப்போமாக…

marieeswari

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago