மாங்கல்ய பலம் பெற சோமவார விரதம் – சிவனருள் பெறும் புனித வழி

சிவபெருமான் அனைத்திற்கும் ஆதிமூலமாக இருக்கிறார். அவரை வழிபட திங்கட்கிழமை (சோமவாரம்) மிகவும் சிறந்த நாள். “சோம” என்பது பார்வதியுடன் கூடிய சிவனையும், சந்திரனையும் குறிக்கும். சந்திரன், ஒரு காலத்தில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, சிவனை தவம் செய்து குணமடைந்தான். இதனால் மகிழ்ந்த சிவன், சோமவாரத்தை ஒரு விரத நாளாக அங்கீகரித்தார்.

விரதம் செய்யும் முறை:

திங்கட்கிழமை அதிகாலை எழுந்து, சிவலிங்கத்திற்கு பூஜை செய்து, திருநீறு பூசிக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற நைவேத்தியம் வைத்து, சிவ மந்திரம் மற்றும் புராணங்களை படிக்கலாம். முழு உபவாசம் மேற்கொள்வது சிறந்தது. முடியாதவர்கள் உப்பு இல்லாத உணவோ, பாலும் பழமோ எடுத்துக்கொள்ளலாம். மாலை கோவிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்து, நைவேத்ய பிரசாதம் கொண்டு விரதத்தை முடிக்கலாம். 16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதம் செய்வது சிறந்தது. தவறினால் பின்னர் தொடரலாம்.

இதையும் படிக்கலாமே:
கடன் பிரச்சனைகளுக்கும் அதற்கான பரிகாரங்களுக்கும் 
https://astrologytamil.in/for-debt-problems-and-solutions/

கார்த்திகை, சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி மாதங்களின் முதல் திங்கட்கிழமைகள்.

விரதத்தின் காலம்:
வாழ்நாள் முழுவதும், 12 ஆண்டுகள் அல்லது குறைந்தபட்சம் கார்த்திகை மாதத்தில் அனுஷ்டிக்கலாம்.

சோமவார விரதக் கதை:
சீத்ரவர்மன் என்ற மன்னனின் மகள் சீமந்தினி, ஜாதகத்திலுள்ள மாங்கல்ய அபாயத்தைத் தவிர்க்க, மைத்ரேயியின் அறிவுரையின்படி சோமவார விரதம் மேற்கொண்டாள். இறுதியில், இழந்த கணவரை மீண்டும் பெற்றாள். இது சிவனின் கருணை மற்றும் விரதத்தின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

சோமவார விரதம் ஒரு புனித ஆன்மிக வழிபாடு. சிவபெருமானின் அருள் பெற இதனை நம்பிக்கையுடன், உணர்வோடு கடைபிடிக்கலாம்.

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago