புரட்டாசி மாத மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை தினம், நம் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசியைப் பெறவும், பித்ரு தோஷத்தை நீக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

மஹாளய அமாவாசை பரிகாரங்கள்:

புனித நதிக்கரையோ அல்லது நீர் நிலையோ அருகில் சென்று, தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது. தர்ப்பணம் கொடுக்கும் பொழுது, எள், தண்ணீர், பழங்கள் போன்றவற்றை வழங்குவது வழக்கம். தர்ப்பணத்தை காலை 6 மணி முதல் 1 மணிக்குள் செய்வது சிறப்பு. ராகுகாலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்க்கவும். வஸ்திர தானம், தண்ணீர் தானம், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவது போன்ற தானங்களை செய்வதும் சிறப்பாகும். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி உங்கள் வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம். பசியோடு இருக்கும் ஏழை எளியோருக்கு உணவு கொடுப்பது மிகவும் புனிதமான செயல். வீட்டை சுத்தமாக வைத்து, கோயிலுக்குச் சென்று சுத்தம் செய்வது நல்லது.

இதையும் படிக்கலாமே:

முப்பெருந்தேவியர் வணங்கும் வித்தக முறைகள்:
https://astrologytamil.in/dramatic-ways-of-worshiping-the-three-goddesses/

மஹாளய அமாவாசையின் சிறப்பு:

முன்னோர்களின் ஆசிர்வாதம் இல்லாமல், வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படலாம். மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்கி, வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முன்னோர்களை நினைத்து, அவர்களுக்கு அர்ப்பணிப்பது ஆன்மீக ரீதியாக நம்மை உயர்த்தும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று கூடி, முன்னோர்களை வழிபடுவதால், குடும்ப ஒற்றுமை மேம்படும்.

  • சுமங்கலி பெண்கள் விரதம் இருக்கவோ, தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது.
  • அன்று வீட்டு வாசலில் கோலம் போட கூடாது.
admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago