முருகனின் முழு அருளோடு பிறந்த குழந்தைகள் யார் யார் தெரியுமா?

நாம் அனைவரும் இந்த உலகில் ஒரு குறிப்பிட்ட நாளில் பிறந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் என்பது சிறப்பானது. ஒரு குழந்தை பிறப்பதற்கும், அதற்கான சூழ்நிலைகளுக்கும் ஆன்மிக உலகத்தில் ஒரு பெரிய தன்மை உண்டு. பல பெற்றோர்கள் குழந்தை பிறப்பதற்காக இறைவனை வேண்டி பூஜைகள் செய்து, விரதங்கள் இருந்து, அவரது அருளை பெறுகிறார்கள் . குறிப்பாக, முருகப் பெருமானை வழிபடும் பலரும், அவர் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்ததாக நம்புகிறார்கள்.
முருகனிடம் பிரார்த்தனை செய்து பிறந்த குழந்தைகளுக்கு அவரது அருள் கிடைப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆன்மிக ரீதியாக, சில மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு முருகனின் அருள் முழுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கு ஒரு ஆன்மிக விளக்கம் உள்ளது.ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இருக்கும். ஆனால் அந்த 12 மாதங்களில் இரண்டு மாதங்கள் வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களுக்கு முருகனுடன் நேரடியான தொடர்பு உண்டு.

இதையும் படிக்கலாமே:
30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் வக்கிர நடையில் – என்ன மாற்றங்கள் நடக்கப்போகின்றன? 
https://astrologytamil.in/after-30-years-saturn-is-in-retrograde-what-changes-are-going-to-happen/

இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் முருகனிடம் இயற்கையான ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்.பக்தி மற்றும் ஆன்மிகத்தில் அதிக ஆர்வதோடு இருப்பார்கள்
முருகனுக்கு உரிய மற்றொரு முக்கியமான மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் முருகனை வழிபட்டால், அவர் அருள் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. கார்த்திகை தீபம், சுப்பிரமணிய சஷ்டி போன்ற விழாக்கள் இம்மாதத்தில் நடைபெறும். இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகளும் முருகனின் ஆசீர்வாதத்துடன் வளர்வார்கள் என்று கூறப்படுகிறது.
எந்த மாதத்தில் பிறந்தாலும், அவரை முழு மனதுடன் வழிபட்டால், அவரது அருள் நிச்சயமாக கிடைக்கும்.
ஆனால், வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு,குறிப்பிட்ட கோள்களின் சந்ததி,செவ்வாய்க்கிழமையின் நலன்கள்,முருகனின் சக்தி நிலை என்பவற்றால் முருகனின் அருள் இயற்கையாகவே அதிகமாக கிடைக்கிறது என்று ஆன்மிகம் கூறுகிறது..

admin

Recent Posts

வாழ்வின் சூத்திரம் “தீதும் நன்றும் பிறர்தர வாரா”

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…

2 months ago

காலத்தின் கண்கள் – இந்திய ஜோதிட வரலாறு

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…

2 months ago

காவிரி அன்னைக்குச் சீர்வரிசை

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…

5 months ago

சுக்கிரனின் பார்வையால் யோகம் அடிக்கும் 3 ராசிகள்

இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…

5 months ago

நிலம், வீடு வாங்கும் சிக்கல் நீங்க எளிய பரிகாரம்

இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…

5 months ago

ஒரு மண்டலம் விரத ரகசியம் சித்தர்களின் உறுதியான வாக்கு

இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…

5 months ago