Aadi Amavasi which removes sins
நாளைய தினம் ஆடி அமாவாசை. மற்ற அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் கூட, இந்த அமாவாசை திதி அன்று, முன்னோர்களை நினைத்து திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தவறவிட்ட முன்னோர்கள் வழிபாட்டிற்கான பலனையும் முழுமையாக நமக்குப் பெற்றுத் தரக்கூடிய அமாவாசை இந்த ஆடி அமாவாசை. இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் பாவங்களை நீக்கி, மோட்சத்தை அடைய உதவும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை நாளில் தானம் செய்வது, கோவில்களுக்கு சென்று வழிபடுவது போன்ற தர்ம காரியங்கள் செய்வது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:
இந்த ஆடிப்பெருக்கில் தாலி கயிறு மாற்றகூடாதா ஏன்?
ஆடி அமாவாசை வழிபாடு செய்யும் முறை:
வழிபாடு செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
முன்னோர்களின் படங்களை ஒரு பூஜை தட்டில் வைத்து, பூக்கள், விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். தர்ப்பணம் கொடுக்கும் பொழுது, எள், தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி, முன்னோர்களின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பூஜை முடித்த பின்னர், பிரசாதம் வழங்கி, அனைவரும் சேர்ந்து உண்ணலாம்.
திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நேரம்:
நாளை 4-8-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:45 க்கு முன்பாகவே திதி தர்ப்பன காரியங்களை நிறைவு செய்து கொள்ளவும். பிறகு மதியம் 1:30 மணிக்கு மேல் வீட்டில் இறந்தவர்களுக்கு படையல் போட்டு, வழிபாட்டை முடித்துவிட்டு, காகத்திற்கு சாதம் வைத்துவிட்டு வீட்டில் இருப்பவர்கள் உணவு சாப்பிட வேண்டும். நாளைய தினம் முன்னோர்களுக்காக சமைத்த உணவு பண்டங்களை வெளி ஆட்களுக்கு கொடுக்கக் கூடாது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு மனிதன் தன் வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்ற வாழ்வியல் ரகசியத்தை ஒரே வரியில்…
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, வான்வெளியில் நகரும் கோள்களின் அசைவுகளைக் கண்டு, அவை மனித வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை ஒரு…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், காவிரி அன்னையின் பெருமையையும், ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமானுக்கும் அவளுக்கும் உள்ள பாசப் பிணைப்பைப் பற்றியும்,…
இன்றைய ஜோதிடச் செய்திகள் பகுதியில், கிரகங்களின் மாற்றத்தால் அபரிமிதமான செல்வச் செழிப்பைப் பெறவிருக்கும் மூன்று ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.…
இன்றைய ஆன்மிகச் செய்திகள் பகுதியில், சொந்தமாக நிலம் மற்றும் வீடு வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களை நீக்குவதற்கான சக்தி வாய்ந்த…
இன்றைய ஆன்மிக ரகசியங்கள் பகுதியில், நம்முடைய சித்தர்கள் அருளிய சக்தி வாய்ந்த ஒரு மண்டல விரதத்தின் மகத்துவத்தையும், அதன் செயல்…