Astrology
வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா? திருச்செந்தூர் கூறும் விளக்கம்!
வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா? திருச்செந்தூர் கூறும் விளக்கம்!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அதன் ராஜகோபுரம் மீது வைக்கப்பட்டுள்ள வேலுக்காகப் பிரசித்தி பெற்றது. “வேண்டுதல் வினைஇல்லை” என்பதே இந்த வேலின் மகிமையை உணர்த்துகிறது.
பல பக்தர்களின் மனதில் எழும் ஒரு கேள்வி: “வீட்டில் வேல் வைத்து வழிபடலாமா?” இந்தக் கேள்விக்கான விடை திருச்செந்தூர் முருகன் ஆலயமே நமக்குத் தருகிறது. திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் அமைந்துள்ள திருவேல், வான் நோக்கிப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்த நிகழ்வே, வீட்டில் முருகன் வேல் வைத்து வழிபடுவது உகந்தது என்பதை உணர்த்துகிறது. ஆம், இதுபோன்ற முருகனின் ஆயுதமான வேலை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம், நமது கர்ம வினைகள் அகற்றப்படும் என்றும், வாழ்வு செழிக்கும் என்றும் ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
வேலனுக்கு உரிய மூல மந்திரங்களை நாம் மனமுருகக் கூறுவதன் மூலம், வேலாயுத நாயகனான முருகப்பெருமான் நமது வாழ்க்கையைச் செழிப்புறச் செய்வார் என்பது ஐதீகம். எனவே, நம்பிக்கையுடன் வேல் வைத்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும்.
