Connect with us

நாளை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்

New order from Kerala High Court on Sabarimala 18th step photoshoot issue

INFORMATION

நாளை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதான நடை நாளை திறக்கப்படுகிறது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் இரண்டாம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சித்திரை விஷு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை தந்திரி தண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல் சாந்தியான அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்கிறார். அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யாபிஷேகம், உஷ பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறும்.

இதையும் படிக்கலாமே:
தெய்வீக மற்றும் அசுர மனிதர்களின் பண்புகள் பற்றி கீதை
https://astrologytamil.in/gita-about-the-characteristics-of-divine-and-demonic-beings/

ஏப்ரல் 2ஆம் தேதி பங்குனி ஆராட்டு விழாவுக்கு கொடியேற்றம் நடைபெறும். கொடியேற்றத்திற்கு பின் இரவில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படுகிறது. தொடர்ந்து சில நாட்களில் சித்திரை விசு பண்டிகையும் வருவதால் கோவில் நடை தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செய்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை மட்டுமல்லாது மாசி மாத பூஜை, பங்குனி ஆராட்டு விழா, சித்திரை விஷு உள்ளிட்ட முக்கிய நாட்களிலும் நடை திறக்கப்படுவது வழக்கம்.

More in INFORMATION

To Top