INFORMATION
ஸ்ரீ முத்தாரம்மன் வரலாறு!
வரமுனி என்ற அசுரனுக்கு அகத்திய முனிவர் கொடுத்த சாபத்தால் மகிஷாசுரன் தோன்றி தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் செய்த யாகத்தில் பிறந்த லலிதாம்பிகை மகிஷாசுரனை வதம் செய்தாள். சிவபெருமான் இடது பாகத்தில் சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையுடன் இணைந்து இங்கு அருள்பாலிக்கிறார்.
மக்களின் நோயைப் போக்க முத்துக்களை முத்தாரமாக மாற்றி அருளியதால் அம்பிகைக்கு முத்தாரம்மன் என்ற பெயர் ஏற்பட்டது. பெரும்பாலான சிவாலயங்களில் லிங்கத் திருமேனி இருக்கும். ஆனால் இங்கு சிவபெருமான் மற்றும் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்கள்.
இதையும் படிக்கலாமே: துர்கா அஷ்டமி அல்லது மகா அஷ்டமி https://astrologytamil.in/durga-ashtami-or-maha-ashtami/
குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர்-முத்தாரம்மன் கோயில் மிகவும் பழமையானது மற்றும் பல சிறப்புகளை உடையது. இங்கு சிவபெருமான் மற்றும் அம்பிகை அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்.
