Connect with us

திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மனுக்கு வழங்கப்பட்ட 4 டன் பூக்கள்

4 tons of flowers offered to Sri Padmavati Ammavari Amman in Trichy

INFORMATION

திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மனுக்கு வழங்கப்பட்ட 4 டன் பூக்கள்

திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மவாரி கார்த்திகை பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக நிறைவுற்றதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை அம்மன் கோயிலில் புஷ்பயாக மகோற்சவம் நடைபெற்றது.

விழாவாக ஸ்நபன திருமஞ்சனம்:

இதன் ஒரு பகுதியாக, காலை 10.30 மணி முதல் 12 மணி வரை அம்மனுக்கு சாஸ்திரோக்தமாக ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இந்த சந்தர்பத்தில் பால், தயிர், தேன், தேங்காய் நீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் விசேஷமாக அபிஷேகம் நடைபெற்றது.

புஷ்பயாகம் சந்தர்பத்தில் டிடிடி தோட்டக்கலைத்துறைக்கு தானமாக வழங்கப்பட்ட 4 டன் பூக்கள் அம்மன் புஷ்பயாகத்திற்கு பயன்படுத்தப்பட்டன. இதில் 2 டன் தமிழ்நாடு, ஒரு டன் ஆந்திரப் பிரதேசம், ஒரு டன் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தானமாக வழங்கப்பட்டது.

விமரிசையான பூக்களின் ஊர்வலம்:

மதியம் 1.30 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பூக்கள், இலைகள் ஆகியவற்றை அதிகாரிகள், பக்தர்கள் கோயில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக ஸ்ரீ பத்மாவதி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிக்கலாமே:
கார்த்திகை தீப திருநாளில் எந்த முக விளக்குகளை ஏற்றலாம் 
https://astrologytamil.in/which-face-lamps-can-be-lit-on-karthigai-deepa-festiv

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி முக மண்டபத்தில் புஷ்பயாக மகோற்சவம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வேத பாராயணம் நடைபெறும்போது சாமந்தி, சம்பங்கி, கன்னேர, ரோஜா, மல்லிகை, மொல்லிகை, கனகாம்பரம், தாமரை, கழுவை, மொகலி, மாதுளம்பூ, செண்டு மல்லிகை, பவள மலர் போன்ற 14 வகையான பூக்கள், மருவம், தாமரை, பில்வம், துளசி, கதிர்பச்சை போன்ற ஆறு வகையான இலைகளால் அம்மனுக்கு புஷ்ப ஆஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சோபனமாக நடைபெற்ற இந்த புஷ்பயாக மகோற்சவத்தை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திளைத்தனர்.

பிரம்மோற்சவங்களில் அல்லது நித்திய கைங்கரியங்களில் அர்ச்சகர், பரிசாரகர்கள், அதிகாரிகள், அல்லது பக்தர்கள் தெரியாமல் ஏதேனும் குறைபாடுகள் நேர்ந்திருந்தால் அவற்றுக்கு பிராயச்சித்தமாக புஷ்பயாகம் நடத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஜேஇஓக்கள் ஸ்ரீ வீரபிரம்மன், ஸ்ரீமதி கௌதமி, கோயில் துணை இஈவோ ஸ்ரீ கோவிந்தராஜன், தோட்டக்கலை துணை இயக்குனர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் மற்றும் பிற அதிகாரிகள், கோயில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்

More in INFORMATION

To Top