latest news
இறைவழிபாட்டில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
தினசரி வழிபாட்டில் கவனிக்க வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
1. காயத்ரி மந்திரம்:
- பயணத்தின் போது காயத்ரி மந்திரத்தை ஜபிக்கக் கூடாது.
- சுத்தமான இடத்தில் மட்டுமே ஜபிக்கவும்.
2. கற்பூரம்:
- கடவுளுக்கு காட்டும்போது, கால்களுக்கு 4 முறை, தொப்புளுக்கு 2 முறை, முகத்திற்கு 1 முறை, முழு உடலுக்கும் 3 முறை சுற்றிக் காட்டவும்.
3. வீட்டு வழிபாடு:
- வீட்டு வாசலில் கோலம் போடாமலும், விளக்கு ஏற்றாமலும் கோயிலுக்கு செல்லக் கூடாது.
- விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போது அதில் இருக்கும் எண்ணெய்/நெய்யை கையால் தொட்டு தலையில் தடவக் கூடாது.
4. தாவர வழிபாடு:
- சிவனுக்கு வில்வ இலை, விஷ்ணுவிற்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல், பிரம்மாவுக்கு அத்தி இலை ஆகியவை சிறந்தவை. வேறு தெய்வங்களுக்கு பதிலாக இவற்றை பயன்படுத்தக் கூடாது.
வேண்டுதல்களை நிறைவேற்றும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் https://astrologytamil.in/2024/06/22/dindigul-fort-mariamman-is-special/
- கலசம் – உடல், நூல் – நரம்புகள், தீர்த்தம் – இரத்தம், தேங்காய் – தலை, மாவிலை – சுவாசம், அரிசி/இலை – மூலாதாரம், கூர்ச்சம் – மூச்சு.
- உபசாரம் – பஞ்ச பூதங்கள்.
6. பெண்களுக்கான தடைகள்:
- பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யக் கூடாது.
- கோவில்களில் சூடம்/தீபத்தை கைகளில் ஏற்றி காட்டக் கூடாது.
7. பூஜைக்கு பயன்படுத்திய பொருட்கள்:
- பூஜைக்கு பயன்படுத்திய தேங்காயை சமையலில் பயன்படுத்தி மீண்டும் நிவேதனம் செய்யக் கூடாது.
8. அமாவாசை விரதம்:
- அமாவாசை விரத நாளில் வீட்டிலேயே சாப்பிட வேண்டும், வெளியில் சமைத்ததை சாப்பிடக் கூடாது.
- முடிந்தால், பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளிக்கலாம்.
- அன்று வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.
9. கோயில் நடைமுறைகள்:
- கோயிலுக்கு செல்லும்போது முதலில் கோபுரத்தை வணங்க வேண்டும் (கோடி புண்ணியம்).
- கொடி மரத்தையும் வணங்க வேண்டும்.
- எந்த தெய்வ சிலைகளையும் கைகளால் தொட்டு வணங்கக் கூடாது.
- சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்யாமல், குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுடன், நட்சத்திரம், கோத்திரம் சேர்த்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
